அதிமுகவினர் சண்டை.. தலை தெறிக்க ஓடிய வேட்பாளர்.. அடிபடாமல், வேட்டி கிழியாமல் தப்பினார்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் நடந்த தேர்தல் ஆய்வுக் கூட்டத்தின்போது ஏற்பட்ட பெரும் அடிதடி மோதலால், வேட்பாளர் இரா. கோபாலகிருஷ்ணன் தலை தெறிக்க ஓடும் நிலை ஏற்பட்டது.

மேலூர் சட்டசபைத் தொகுதியில் நடந்த ஆய்வுக் கூட்டத்தின்போதுதான் இந்த அக்கப்போர் நடந்து பெரும் அமளிக் காடாகி விட்டது

அமைச்சர் செல்லூர் ராஜு, மா.செ. முத்துராமலிங்கம், மேலூர் எம்.எல்.ஏ. சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் இக்கூட்டத்தில்.

admk

அப்போது திடீரென சாமி தரபுபுக்கும், கொட்டாம்பட்டி சரவணன் குரூப்புக்கும் இடையே வாய்ச்சண்டை மூண்டது. அது அப்படியே உருமாறி வெறித்தனமான அடிதடியாக மாறியது.

இரு தரப்பினரும் கையில் கிடைத்ததை வைத்து சரமாரியாக அடித்துக் கொண்டனர். இதில் நான்கு பேருக்கு மண்டை உடைந்து ரத்தம் குபுகுபுவென கொட்டியது. அவர்களை உடனடியாக மருத்துவமனைக்குத் தூக்கிக் கொண்டு ஓடினர். நாற்காலிகள், சேர்கள் பறந்தன. சட்டசபையில் அடிப்பதைப் போல மைக்கையும் எடுத்து அடித்துக் கொண்டனர்.

இதைப் பார்த்த எம்.பி வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் அங்கிருந்து வேகமாக தப்பிப் போய் விட்டார். இதனால் அவருக்கு அடி விழவில்லை.

இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பும் போலீஸுக்குப் போயுள்ளது. புகாரும் கொடுத்துள்ளனர். ஆனால் போலீஸார்தான் வாங்காமல் வைத்திருக்கிறார்களாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+