சுப்ரீம் கோர்ட்டாவது 'அம்மா'வுக்கு ஜாமீன் கொடுக்கட்டும்: அதிமுகவினர் அங்கபிரதட்சனம்
வேலூர்: ஜெயலலிதா விடுதலைக்காக அதிமுக எம்.ஜி.ஆர். இளைஞர் அணியினர் தக்கோலம் ஸ்ரீஜலநாதீஸ்வரர் கோவிலில் அங்கபிரதட்சனம் செய்தனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் ஜெயலலிதா விடுதலையாக தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் அதிமுகவினர் சிறப்பு பூஜைகள் நடத்துவது, மண் சோறு சாப்பிடுவது என்று பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் வேலூர் மாவட்ட அரக்கோணம் ஒன்றிய அதிமுக எம்.ஜி.ஆர். இளைஞர் அணியினர் தக்கோலத்தில் உள்ள ஸ்ரீகிரிராஜ கன்னிகாம்பாள் சமேத ஜலநாதீஸ்வரர் கோவிலுக்கு சென்றனர். அங்கு ஸ்ரீஜலநாதீஸ்வரர், ஸ்ரீகிரிராஜகன்னிகாம்பாள் மற்றும் கோவிலின் விசேஷ மூலவர் ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஆகியோரின் சன்னதிகளில் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.
அதன் பிறகு ஜெயலலிதா விடுதலையாகி வர வேண்டி இளைஞர் அணியினர் அங்கபிரதட்சனம் செய்தனர். ஒன்றிய இளைஞரணி செயலாளரும், வேலூர் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினருமான ஏ.பி.எஸ்.லோகநாதன் தலைமையில் நடந்த இந்த அங்கபிரதட்சன நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தேவையில்லாத பாயிண்ட்களை ஜெயலலிதாவின் சட்டக்குழு எடுத்து வைத்ததால் தான் அவருக்கு ஜாமீன் கிடைக்காமல் போய்விட்டது என்று மூத்த வழக்கறிஞர்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications