அம்மா நல்லாருந்தா இப்படி ரகசியம் கூட்டம் போடுவார்களா அதிமுக எம்எல்ஏக்கள்? அதிர்ச்சியில் தொண்டர்கள்!
சென்னை: சென்னையில் அதிமுக எம்எல்ஏக்கள், மாஜி அமைச்சர்கள் அடிக்கடி ரகசிய கூட்டம் போடுவது அக்கட்சி தொண்டர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அதிமுகவைப் பொறுத்தவரையில் முதல்வர் ஜெயலலிதாவை மீறி செயல்படுகிற துணிச்சல் யாருக்கும் வந்தது இல்லை. கடந்த ஆட்சி காலத்தில் அப்படி செயல்பட்ட ஓ. பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக கடும் நெருக்கடியுஐத்தான் சந்தித்தனர்.

ஓபிஎஸ் வசம் துறைகள்
தற்போது முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் பொறுப்பு முதல்வரை நியமிக்க மத்திய அரசு நெருக்கடி கொடுத்தது. இதை சசிகலா தரப்பு நிராகரித்ததால் ஜெயலலிதாவின் துறைகள் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

ஓபிஎஸ்-க்கு எதிராக கூட்டம்
இதற்கு முன்னதாக சென்னை நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் ரகசிய கூட்டம் ஒன்றை நடத்தி உள்ளனர். அதில் முதல்வர் ஜெயலலிதாவின் துறைகள் எடப்பாடி பழனிச்சாமிக்கே ஒப்படைக்கப்பட வேண்டும்... அதுதான் சரியாக இருக்கும் என விவாதித்திருக்கின்றனர். சசிகலா தரப்பும் இதைத்தான் விரும்பியது.

மீண்டும் ரகசிய ஆலோசனை
ஆனால் மத்திய பாஜக அரசின் விருப்பப்படியே ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஜெயலலிதாவின் துறைகள் ஒதுக்கப்பட்டதால் ரகசிய கூட்டம் நடத்திய எம்எல்ஏக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனராம்.. அதேபோல் ஜெயலலிதாவின் துறைகள் ஓ. பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்ட அன்றும் நள்ளிரவில் ஒரு ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளதாம்.

மீண்டும் ரகசிய ஆலோசனை
ஆனால் மத்திய பாஜக அரசின் விருப்பப்படியே ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஜெயலலிதாவின் துறைகள் ஒதுக்கப்பட்டதால் ரகசிய கூட்டம் நடத்திய எம்எல்ஏக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனராம்.. அதேபோல் ஜெயலலிதாவின் துறைகள் ஓ. பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்ட அன்றும் நள்ளிரவில் ஒரு ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளதாம்.

தொண்டர்கள் குமுறல்
மாஜி தென்மாவட்ட அமைச்சர் உள்ளிட்ட சில எம்எல்ஏக்கள் ஓ. பன்னீர்செல்வத்தை நள்ளிரவில் சந்தித்து பேசியுள்ளனர். அக்கூட்டத்தில் தமக்கு எதிராக ஆலோசனை நடத்திய அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுப்பார்களா? என ஓ. பன்னீர்செல்வம் விவாதித்ததாக கூறப்படுகிறது. இப்படியான ரகசிய கூட்டங்கள் குறித்து அறியும் அதிமுக தொண்டர்கள், அம்மா உடல் நலத்துடன் இருந்தால் இப்படியான ஆலோசனைக் கூட்டங்கள் நடத்துவார்களா? என குமுறுகின்றனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications