சட்டசபையில் ஜிஎஸ்டி மசோதா... ஓரணியில் அதிமுக எம்எல்ஏக்கள்... பின்னணி இதுதானாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓபிஎஸ், ஈபிஎஸ், தினகரன் அணி என அதிமுகவினர் பிரிந்து இருந்தாலும், சட்டசபையில் ஓரணியாக நின்று ஜிஎஸ்டி மசோதாவை ஆதரித்துள்ளனர். இதன் பின்னணில் பாஜக தலைவர்கள் இருப்பதாக தெரிகிறது.

கடந்த வாரம் திடீரென இரண்டு நாட்கள் டிடிவி தினகரன் சென்னையில் இருந்து திடீரென எங்கோ பயணமானார். அவர் டெல்லி செல்வதாக கூறப்பட்டது. ஆனால் அவர் சென்ற கேரளாவாம்.

ADMK MLAs support GST bill passed in TN Assembly background story

அமித்ஷாவை சந்திக்க அவர், டெல்லியுள்ள பாஜக தலைவர் ஒருவர் மூலமாக முயற்சித்தார். அவரும் அமித்ஷாவிடம் பேசினார். அமித்ஷாவே, பிரதமர் வெளிநாடு போயிருக்கிறார். அவர் வரட்டும். அவரை கலந்தாலோசித்து விட்டு சொல்கிறேன் என சொன்னதால், தினகரனுக்கு அப்பாயின்ட்மென்ட் கிடைக்கவில்லை.

இதனால் கேராளா சென்று இரன்டு நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு திரும்பினார். கேரளாவில் ஆளுநர் சதாசிவத்திடம் பேசியதாக ஒரு தகவல் இருக்கிறது. ஆனால் இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை.

அதேசமயம், ஜிஎஸ்டியை ஆதரியுங்கள் என சதாசிவம் அட்வைஸ் செய்ததன் அடிப்படையிலேயே ஆதரிக்க தனது ஆதரவு எம்எல்ஏக்களிடம் தினகரன் கேட்டுக்கொண்டாதாக தகவல் சொல்கின்றனர். இதனையடுத்தே ஓரணியில் அதிமுக எம்எல்ஏக்கள் ஜிஎஸ்டிக்கு ஆதரவு தெரிவித்தனர். ஜிஎஸ்டி மசோதாவை அமளி துமளிக்கிடையே தாக்கல் செய்தார் அமைச்சர் வீரமணி.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Tamil Nadu Assembly wednesday session, which was earlier being expected to be crucial for paving the way for the rollout of the Goods and Services Tax (GST) Bill on July 1. Here is the background story of admk mlas joined support for GST bill in Assembly.
Please Wait while comments are loading...