அவ்வை சண்முகம் சாலையை அதிர வைத்த அதிமுக எம்.எல்.ஏக்களின் கைத்தட்டல்...!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, சட்டசபை கட்சித் தலைவராக தேர்வு செய்யும் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தின்போது பேச்சை விட கைத்தட்டலே அதிகம் இருந்தது. அதிமுக எம்.எல்.ஏக்களின் கைத்தட்டல் விண்ணைப் பிளந்தது என்று கூறும் அளவுக்கு ஜெயலலிதா தேர்வின்போது அனைவரும் கைத்தட்டி உற்சாகமாக ஜெயலலிதா பெயரை வரவேற்றனர்.
இன்று காலை 7 மணியளவில் ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் நடந்தது. இதற்காக அதிகாலையிலேயே அனைவரும் வந்து சேர்ந்தனர்.

வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டு விட்டு உள்ளே சென்றனர். அதன் பின்னர் ஜெயலலிதாவை சட்டசபைக் கட்சித் தலைவராக ஜெயலலிதாவை தேர்வு செய்யும் படலம் நடந்தது.

கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் மட்டுமே பேசினார். எழுதி வைத்த பேச்சை அவர் வாசிக்கத் தொடங்கியது முதல், ஜெயலலிதாவை சட்டசபைக் கட்சித் தலைவராக தேர்வு செய்யும் வரை, ஜெயலலிதாவின் பெயரை அவர் சொன்னபோதெல்லாம் அதிமுக எம்.எல்.ஏக்கள் கைத்தட்டியபடியே இருந்தனர்.

குறிப்பாக சட்டசபைக் கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்வு செய்யப்படுவதாக அவர் அறிவித்தபோது சில நிமிடங்களுக்கு கைத்தட்டல் நீடித்து கூட்ட அரங்கையே அதிர வைத்தது.
ஏற்கனவே அதிமுக எம்.எல்.ஏக்கள் கைத்தட்டி வந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் வேறு பலத்த கரவொலி எழுப்புமாறு கேட்டுக் கொண்டார். இதனால் கைத்தட்டல் சத்தம் விண்ணைத் தொட்டது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications