'ரத்தத்தின் ரத்தமாக' ஒரு வாய்ப்பு... 11ம் தேதி முதல் அதிமுக உறுப்பினர் சீட்டு விநியோகம்!
சென்னை: அதிமுகவில் புதிய உறுப்பினராவதற்கான உறுப்பினர் அட்டை ஜூன் 11ம் முதல் வழங்கப்படும் என்று கட்சி பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
அதிமுக உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பித்துக் கொள்வதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்குமான பணிகள் கடந்த 13.6.2013 அன்று தொடங்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் 6.8.2013 வரை தலைமைக் கழகத்தில் பெறப்பட்டன.

அதில் 30.7.2013 வரை பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவங்களை தலைமைக் கழகத்தின் வழங்கி, ரசீது பெற்றுள்ள அனைவருக்கும் உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தற்போது, 31.7.2013 முதல் 5.8.2013 வரை உறுப்பினர் உரிமைச் சீட்டு வேண்டி விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பித்து உள்ளவர்களுக்கும், 13.6.2013 முதல் 6.8.2013 வரை உறுப்பினர் உரிமைச் சீட்டு வேண்டி பண அஞ்சல் மூலம் உரிய கட்டணத் தொகையுடன் விண்ணப்பப் படிவங்களை தலைமைக் கழகத்தில் சேர்ப்பித்து உள்ளவர்களுக்கும்; கழக உறுப்பினர் உரிமைச் சீட்டு வேண்டி அதற்கான விண்ணப்பப் படிவங்களை தலைமைக் கழகத்தில் சேர்ப்பித்துள்ள அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் வருகின்ற 11.6.2014 (புதன் கிழமை) காலை 9 மணி முதல் புதிய உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் வழங்கப்படும்.
ஆகவே, கழக உடன்பிறப்புகள் உரிய ரசீதுகளை தலைமைக் கழகத்திற்கு கொண்டு வந்து காண்பித்து அவரவர்களுக்கான உறுப்பினர் உரிமைச் சீட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications