அதிமுக கொண்டாட்டத்தில் பட்டாசால் தீப்பிடித்த கட்சி அலுவலகம்!
மன்னார்குடி: மன்னார்குடியில் அதிமுகவினர் ஆர்.கே.நகரில் அதிமுக முன்னிலையில் இருப்பதை பட்டாசு வெடித்துக் கொண்டாடிய போது தீப்பொறி பறந்து கீற்றுக் கொட்டகையால் ஆன அலுவலகம் தீப்பிடித்து எரிந்து நாசமானது.
சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுதலையான ஜெயலலிதா ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டார். அந்த இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.

இதில் ஜெயலலிதா முன்னிலையில் உள்ளார் என்பதை அறிந்த அதிமுகவினர் தமிழக முழுவதும் கொண்டாட்டத்தில் உள்ளனர். இனிப்புகளும், பட்டாசுகளுமாக அவர்களின் கொண்டாட்டம் தூள் பறந்தது. ஆட்டமும், பாட்டமும் களை கட்டி வருகின்றது.
இந்நிலையில் இந்த வெற்றியினை மன்னார்குடி அதிமுகவினர், மன்னார்குடி அதிமுக நகர அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
அப்போது பட்டாசு வெடித்ததில் தீப்பொறி பட்டு கீற்று கொட்டகையில் இருந்த அதிமுக அலுவலகம் எரிந்து தீக்கரையானது. இதில் அங்கிருந்த கோப்புகளும், முக்கிய பொருட்களும் கூட எரிந்து நாசமாகின.
அதன் அருகே இருந்த 10க்கும் மேற்பட்ட குடிசைகளும் தீயில் கருகின. 4 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications