நாமக்கல் ஜெயலலிதா பிரச்சாரத்தில் தக்காளி சாதம் சாப்பிட்ட தொண்டர்கள் 15 பேர் மயக்கம்
நாமக்கல்: நாமக்கல்லில் அதிமுக கூட்டத்திற்கு வந்த போது தக்காளி சாதம் உட்கொண்ட 15 அதிமுக தொண்டர்கள் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப் பட்டு சிகிச்சைக்காக நாமக்கல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
நாமக்கல் லோக்சபா தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நேற்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். இந்த பிரசார கூட்டத்தில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இப்பிரச்சாரத்தில் கலந்து கொள்வதற்காக குமாரபாளையம் அருகே உள்ள கொளத்துக்காடு பகுதியைச் சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் ஒரு பஸ்சில் வந்திருந்தனர். இவர்களுக்கு மதியம் 2 மணி அளவில் தக்காளி சாதம் வழங்கப்பட்டது. 3 மணி அளவில் கூட்டம் முடிவடைந்தாலும், இவர்கள் செல்வதற்கு ஏற்பாடு செய்து இருந்த தனியார் பஸ் வராத காரணத்தால், அங்கேயே காத்திருந்தனர்.
அப்போது திடீரென அவர்களில் சிலருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை அமைச்சர் தங்கமணி, நாமக்கல் சட்டசபை உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தனர்.
-
எங்களை தொட்டுருக்கவே கூடாது குழந்தை.. தவெகவுக்கு அதிமுக பைனல் வார்னிங் -
தமிழகத்தில் பிறக்கும் குழந்தையின் மீது கடன் சுமை! 4 முக்கிய காரணங்களை சொன்ன வெள்ளை அறிக்கை -
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
விஜய் பர்த்டே ஸ்பெஷல்: இரண்டு ‘விஜயபாஸ்கர்’களின் அதிரடி மூவ்! இத்தனை இடிக்கு எடப்பாடி தலை தாங்குமா? -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
Mithun: எடப்பாடி பழனிசாமி மகன் மிதுனை அரசியலுக்கு அழைப்பது தவறு! ராஜசத்யன் கடும் எதிர்ப்பு -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்!












Click it and Unblock the Notifications