ஜெ வீடு - அதிமுக அலுவலகத்தில் விழாக்கோலம்.. அதிமுகவினர் கொண்டாட்டம்!
சென்னை: சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக முன்னணியில் இருந்து வருவதால் முதல்வர் ஜெயலலிதா வீடு, அதிமுக தலைமை அலுவலகம் ஆகியவற்றின் முன்பு ஆயிரக்கணக்கில் அதிமுகவினர் திரண்டுள்ளனர். கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதிமுகவினர் அதிகாலையிலேயே போயஸ் கார்டனில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டிற்கு முன்பு குவிந்துவிட்டனர். கையில் பிளாஸ்டிக், அட்டை இரட்டை இலைகளுடன் குவிந்திருந்தனர்.
AIADMK supporters outside CM J Jayalalithaa's Poes Garden residence in Chennai #Elections2016 pic.twitter.com/Fco5x850pX
— ANI (@ANI_news) May 19, 2016
நெற்றியில் விபூதி, குங்குமத்துடன் உற்சாகமாக குவிந்த அவர்கள் தற்போது அதிமுக முன்னிலை பெற்று வருவதால் கொண்டாட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் இரு இடங்களும் விழாக்கோலம் பூண்டுள்ளது. அம்மாதான் நிரந்தர முதல்வர் என்றும் அவர்கள் உற்சாகமாக குரல் எழுப்பி வருகி்ன்றனர்.












Click it and Unblock the Notifications