'அதிமுகவின் ஆபரேசன் 14': தப்புவார்களா தேமுதிக வேட்பாளர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக உருவாக்கியுள்ள 'ஆபரேசன் -14' திட்டத்தால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது வேட்பாளர்களை தக்கவைக்கவும், ஜெயிக்க வைக்கவும் தனி திட்டம் தீட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசியல் களத்தில் வெற்றி பெற சத்ரியனாகவும் சில சமயம், சாணக்கியத்தனமாகவும் செயல்பட வேண்டும் என்பது எழுதப்படாத விதி.

எப்படியும் 40 தொகுதிகளையும் வென்றெடுக்க வேண்டும் என்று சபதம் எடுத்துள்ள அதிமுக பல்வேறு பாணிகளை கையாண்டு வருகிறது.

கடிதம் எழுதும் ஜெ.

கடிதம் எழுதும் ஜெ.

தொகுதி, தொகுதியாக பறந்து பறந்து பிரசாரம் செய்யும் அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா, அசால்டாக பணியாற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு கடிதம் எழுத உசுப்பேற்றி வருகிறார்.

அவங்க 1 சீட் கூட வரக்கூடாது

அவங்க 1 சீட் கூட வரக்கூடாது

அதிமுக 40 ஜெயிக்க வேண்டும் என்பது எப்படி இலக்கோ, அதேபோல தேமுதிக போட்டியிடும் 14 தொகுதிகளில் 1 தொகுதி கூட ஜெயிக்கக் கூடாது என்பது அதிமுகவினருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அசைன்மென்டாம்.

ஆபரேசன் – 14

ஆபரேசன் – 14

இதற்காக அபரேசன் 14 என்ற ப்ளான் போட்டு செயல்படும் அதிமுக நிர்வாகிகள், வேட்பாளர்களை விலைக்கு வாங்குவது அல்லது தேமுதிக நிர்வாகிகளை செயல்பட விடாமல் முடக்குவது என்று களம் இறங்கியுள்ளனர்.

நாமக்கல் மகேஸ்வரன், சேலம் ராமச்சந்திரன்

நாமக்கல் மகேஸ்வரன், சேலம் ராமச்சந்திரன்

நாமக்கல் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மகேஸ்வரன் இதே பாணியில்தான் அதிமுகவில் ஐக்கியமானார். சேலத்தில் வேட்பாளர் சுதீஷ் வெற்றிக்காக தீவிரமாக செயல்பட்ட மாவட்ட இளைஞரணி செயலாளர் ராமச்சந்திரன் வளைக்கப்பட்டதும் இதே பாணியில்தானாம்.

மதுரை, நெல்லை

மதுரை, நெல்லை

இதேபோல மதுரை, நெல்லையில் தேமுதிக வேட்பாளர்களுக்கு எதிராக காய் நகர்த்தியுள்ளனர் அதிமுகவினர். அதில்தான் விஜயகாந்தின் தம்பி பால்ராஜ் இணைந்ததாக கூறப்படுகிறது.

அக்கவுண்டில் மாறும் பணம்

அக்கவுண்டில் மாறும் பணம்

சொந்த வேட்பாளரை தோற்கடிக்க வைக்க 50 லட்சம் வரை விலை பேசப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் சுதாரிக்கும் வேட்பாளர்கள், தேமுதிக மாவட்ட நிர்வாகிகள், அதற்கான ஆட்கள் நாங்கள் இல்லை என்று கூறி அதிமுகவினரை விரட்டியடித்த சம்பவமும் நடந்துள்ளதாம்.

ஆபரேசனை முறியடிப்பாரா கேப்டன்

ஆபரேசனை முறியடிப்பாரா கேப்டன்

சினிமாவில் தீவிரவாதிகளின் எத்தனையோ ஆபரேசன்களை அசால்டாக முறியடித்த கேப்டன், அரசியல் களத்தில் அதிமுகவினரின் ஆபரேசனை முறியடிப்பாரா? என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+