ஆர்.கே நகரில் இன்று இரவுக்குள் என்ன நடக்கப்போகிறது தெரியுமா? தினகரன் பகீர்
ஆர்.கே நகரில் இன்று இரவுக்குள் ரூ120 கோடி பட்டுவாடாவுக்கு ஆளும்கட்சி திட்டமிட்டுள்ளதாக டி.டி.வி தினகரன் தெரிவித்து உள்ளார்.
Recommended Video

சென்னை : ஆர்.கே நகரில் இடைத்தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் இன்று இரவுக்குள் 120 கோடி ரூபாயை வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய ஆளும்கட்சி திட்டமிட்டுள்ளதாக தினகரன் தெரிவித்து உள்ளார்.
ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வருகிற 21ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான இறுதிக்கட்ட பிரச்சாரம் இன்று மாலை ஐந்து மணியோடு நிறைவடைந்தது.
இறுதிநாள் பிரச்சாரத்தில் அனைத்து வேட்பாளர்கள் மற்றும் அவர்களது கட்சிகளின் முக்கிய தலைவர்கள் இன்று களம் இறங்கியதால், தேர்தல் பிரச்சாரத்தில் அனல் பறந்தது. முக்கியமாக சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி தினகரனுக்கு பிரம்மாண்டமான அளவில் கூட்டம் கூடியது.

இறுதி கட்ட பிரசாரம்
டி.டி.வி தினகரன் பிரச்சாரம் செய்த வைத்தியநாதன் மேம்பாலம் அருகில் மக்கள் அதிக அளவில் கூடியதால், இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து அந்தப்பகுதியில் ஸ்தம்பித்தது. அதே போல, காசிமேடு பகுதியில் தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் தனது கட்சி வேட்பாளர் மருதுகணேஷுக்கு வாக்கு சேகரித்தார்.

சளைக்கவில்லை
பிரச்சாரம் முடிவடைந்த நிலையில், ஆர்.கே நகரில் பத்திரிகையாளர்களை சந்தித்த டி.டி.வி தினகரன், தொகுதிக்குள் இதுவரை அ.தி.மு.க.ம்வினர் கட்சி வேஷ்டி அணிந்து போலீஸ் பாதுகாப்போடு பல இடங்களில் கோடிக்கணக்கான பணத்தை விநியோகம் செய்து உள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி பல புகார்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதிர்ச்சியாம்
இவர்கள் ஓட்டுக்கு ஆறாயிரம் ரூபாய்க்கு மேலாக அளித்தும் எனக்கு கூட்டம் கூடுவதை கண்டு ஆளும்கட்சி அதிர்ச்சி அடைந்து உள்ளது. இதனால், தங்கள் இன்று இரவுக்குள் எப்படியாவது 120 கோடி ரூபாயை வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்துவிட வேண்டும் என்று ரகசிய திட்டம் வைத்திருக்கிறார்கள் என்கிற பரபரப்பு தகவலை தெரிவித்து உள்ளார்.

தினகரன் ஆரூடம்
மேலும், ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட தேர்தலின் போதும் இதுபோல கடைசி நேரத்தில் பணத்தை விநியோகிக்க திட்டமிட்டு இருந்ததாகவும், அதை கட்சியினரே பலர் எடுத்து கொண்டு ஓடிவிட்டதால் அதற்காக ஏற்பாடுகளுடன் இந்த முறை பணத்தை கொடுக்க திட்டமிட்டு உள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications