உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீத வெற்றிக்கு உழைப்போம்: பா. வளர்மதி தலைமையில் அதிமுகவினர் உறுதி
சென்னை: உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதவெற்றிக்கு உழைப்பது என அ.தி.மு.க. இலக்கிய அணி கருத்தரங்கில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய களப்பணி குறித்து, அதிமுக இலக்கிய அணி சார்பில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.இ.அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மாவட்ட இலக்கிய அணி செயலாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் மாபெரும் கருத்தரங்கம் இன்று நடைபெற்றது.
கழக இலக்கிய அணிச் செயலாளர் திருமதி பா. வளர்மதி தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அ.இ.அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், விவசாயக் கடன் தள்ளுபடி, 500 மதுபானக் கடைகள் அடைப்பு உள்ளிட்ட 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டது மற்றும் முதலமைச்சரின் சாதனைத் திட்டங்களை பட்டிமன்றம், கருத்தரங்கம் உள்ளிட்டவை மூலம் பொதுமக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

முதல்வருக்கு நன்றி
கூட்டத்தில் 32 ஆண்டுகளுக்கு பிறகு வரலாற்று சாதனை படைத்து கழக ஆட்சி அமைத்த முதல்வர் அம்மாவுக்கு நன்றி தெரிவிப்பது. மக்களின் மனமே எனது மனம் என தவவாழ்வு வாழ்ந்து தேர்தல் நேரத்தில் மக்களுக்கு தந்த வாக்குறுதிகளை பதவியேற்ற ஓரிரு நாட்களில் ஐந்து அரசாணைகளில் கையெழுத்திட்டு தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றிக் காட்டிய அம்மாவுக்கு நன்றி தெரிவிப்பது.

முதல்வருக்கு பாராட்டு
கச்சத்தீவை மீட்பேன் என்று சட்டமன்றத்தில் சங்கநாதம் முழங்கி மீனவ மக்களின் வாழ்வில் விடியலை ஏற்படுத்தி தொடர்ந்து உரிமைப்போர் நடத்தும் புரட்சித்தலைவி அம்மாவுக்கு பாராட்டு.

மெட்ரோ ரத்த வங்கி
202 கோடியில் தலைநகர் டெல்லிக்கு அடுத்து சென்னையில் "மெட்ரோ இரத்த வங்கி" அமைக்கப்படும் என்று அறிவித்ததற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

முதல்வரின் சாதனை
முதல்வரின் தரணி போற்றும் திட்டங்களையும் சாதனைகளையும் பட்டி தொட்டியெங்கும்- குக்கிராமங்கள் முதல் குமரிமுனை வரை தெரு முனை பிரச்சார கூட்டங்கள்- திண்ணைப்பிரச்சார கூட்டங்கள், துண்டு பிரசுரங்கள் மூலமாகவும் கொண்டு சேர்ப்பது என தீர்மானிக்கப்பட்டது.

100 சதவிகித வெற்றி
பட்டிமன்றங்கள், கருத்தரங்கள், கவியரங்கங்கள் மூலமாக எடுத்து சொல்லி வீடு வீடாக, வீதி வீதியாக, கொண்டு போய் சேர்த்து உள்ளாட்சி, நகராட்சி தேர்தலில் 100 சதவீத வெற்றிக் கனியை ஈட்ட சபதமேற்பது ஆகிய 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அதிமுகவினர் உறுதி
கருத்தரங்கில் அவை தலைவர் மதுசூதனன் அமைச் சர்கள் எஸ்.பி வேலு மணி, தங்கமணி, ஆர்.பிஉதயகுமார், சரோ ஜா, ராஜலெட்சுமி, திருச்சி வளர்மதி அமைப்பு செயலாளர்கள் விசாலாட்சி நெடுஞ்செழியன், மைதிலி திருநாவுக்கரசு, உள்பட அனைத்து மாவட்ட செயலாளர்களும் பங்கேற்றனர்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications