ஜெ. இல்லம் ஒரு கோயில் அங்கு ரெய்டா... மைத்ரேயன் வேதனை!
ஜெயலலிதா வீடு ஒரு கோயில் அங்கு ரெய்டு நடத்தியது வேதனை தருகிறது என்று ராஜ்யசபா உறுப்பினர் மைத்ரேயன் கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை: ஜெயலலிதா வீடு ஒரு கோயில் போன்றது அங்கு சோதனை நடத்தியது வேதனை அளிக்கிறது என்று அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் வேதனை தெரிவித்துள்ளார்.
காரணம் என்னவாக இருந்தாலும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் சோதனை என்பது மிகுந்த மன வேதனை அளிக்கிறது. என்னைப் பொறுத்த வரையில் அம்மாவின் இல்லம் ஒரு கோயில் என்று கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் நேற்று இரவு திடீரென வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தியது. ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் அறையை சோதனையிட்ட அதிகாரிகள் சசிகலா அறையில் இருந்து 4 பென் டிரைவ், லேப்டாப் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து சென்றுள்ளனர்.

பாஜகவிற்கு எதிராக முழக்கம்
தொடர்ந்து 5 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையால் அந்தப் பகுதியில் தொண்டர்கள் குவிந்தனர். ஜெயலலிதாவின் வீட்டை கோயில் போல நினைக்கும் கட்சியினர் அங்கு வருமான வரி அதிகாரிகள் வந்து சோதனை நடத்தியதை சகித்துக் கொள்ள முடியாமல் நள்ளிரவில் போராட்டத்தில் குதித்தனர். மேலும் பாஜகவிற்கு எதிரான முழக்கங்களையும் எழுப்பினர்.

சசிகலா குடும்பத்தினர் எதிர்ப்பு
ஜெயலலிதா வீட்டில் நடந்த ரெய்டு குறித்து தினகரன் தரப்பினர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். இளவரசியின் மகன் விவேக் வருமான வரி சோதனை நடக்கும் செய்தியறிந்து போயஸ் கார்டனுக்கு பதறியடித்து வந்தார்.

கட்சியினர் மவுனம்
ஆட்சியாளர்களோ, அமைச்சர்களோ, எம்பிகளோ இதுவரை எந்த கருத்தையும் கூறவில்லை. இந்நிலையில் அதிமுக ராஜ்யசபா உறுப்பினர் மைத்ரேயன் தனது முகநூல் பக்கத்தில் வருமான வரி சோதனை நடைபெற்றது குறித்து ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.

ஜெ. வீடு கோயில்
அதில் காரணம் என்னவாக இருந்தாலும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் சோதனை என்பது மிகுந்த மன வேதனை அளிக்கிறது. என்னைப் பொறுத்த வரையில் அம்மாவின் இல்லம் ஒரு கோயில் என்று தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications