சாமானியன் கவலை சர்க்காருக்கு புரியலையே.. அம்மா நாளிதழின் கண்டன கவிதை
அம்மா நாளிதழ் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளது.
Recommended Video

சென்னை: "எரிபொருள் விலை ஏறினால் எல்லா விலையும் ஏறுமே என்கிற சாமானியன் கவலை சர்க்காருக்கு புரியலையே?" என்று, அம்மா நாளிதழ் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளது.
மத்திய அரசின் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து அனைத்து கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாநில அரசும் தன் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளது. செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமாரும், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு தந்தால்தானே பெட்ரோல் டீசல் விலையை குறைக்க முடியும் என்று தெரிவித்திருக்கிறார்.

அதேபோல, அதிமுகவின் நாளிதழான "நமது அம்மா" விலும் மத்திய அரசின் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து செய்தி வெளியாகி உள்ளது. ஆனால் அந்த கண்டனம் கவிதை நடையிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு தலைப்பு ஆவேசக் கூச்சலும், அடிவயிறு எரிச்சலும் என்று பெயரிடப்பட்டுள்ளது.
அதில் பதிவு செய்யப்பட்ட கண்டன வரிகளானவை:
- கதர் கட்சி ஆண்ட காலத்திலான ஏராள ஊழல்கள் இப்போது இல்லைதான்.
- ஊழல் இல்லை என்கிற அதே வேளையில் மனிதன் நிம்மதியாய் வாழும் சூழலில்லை என்கிற அளவுக்கு பெட்ரோல்- டீசல் விலையேற்றம் பெருங்கவலை தருகிறதே...
- எரிபொருள் விலை ஏறினால் எல்லா விலையும் ஏறுமே என்கிற சாமானியன் கவலை சர்க்காருக்கு புரியலையே...
- சிலிண்டர் விலைறேற்றம் ஏறத்தாழ ஆயிரத்தை தொடும் நிலையில் நடுத்தர வர்க்கம் நிம்மதி இழக்குதே... நித்திரை துறக்குதே...
- அடுப்பெரியும் அதே வேளை சிலிண்டர் விலை கேட்டு அடித்தட்டு மக்களுக்கோ அடி வயிறும் எரியுதே... இதை அறியாதது போல மத்தியில் ஆளும் அரசு அபாரமாய் நடிக்குதே...
- உலகத்தின் வர்த்தகம் பெரும்பாலும் அமெரிக்க டாலரின் அடிப்படையில் என்றிருக்க... இதுவரை காணாத இந்திய பணத்தின் வீழ்ச்சி ஏற்றுமதி செய்வோரை ஏகத்துக்கும் அழிக்குதே... இதனால் ஆட்குறைப்பு வேலை இழப்பு ஏராளமாய் நடக்குதே....
- ஒரு புறம்... வருமான வரி கடுமை. மறுபுறம்... இவ்வுலகில் இல்லாத அளவுக்கு இருபத்தெட்டு சதவீதம் வரை ஜி.எஸ்.டி. வசூலிக்கும் கொடுமை...
- இந்த வரிவிதிப்பு வதையில் இருந்து... பெட்ரோல்- டீசலுக்கு விலக்கு தரமாட்டோம் என்கிற பிடிவாத நிலைமை....
- மேலும் தாமரை ஆளாத மாநிலங்களை மாற்றாந்தாய் போக்கோடு நடத்துகிற சிறுமை... அத்தனையும் சேர்ந்துதான் ஆவேசம் கொள்ளச் செய்யுதோ ஆகாய விமானத்திலும் குழாயடிச் சண்டைக்கு அடிப்படை ஆகுதோ....
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications