ஜெயக்குமார் நன்றி மறந்து நாகரீகமில்லாமல் பேசுகிறார்... நாஞ்சி சம்பத் 'பொளேர்'
டிடிவி தினகரனை சந்திக்காத எம்எல்ஏக்களும் அவருக்கே ஆதரவு தெரிவிப்பதாக அதிமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
சென்னை : அமைச்சர் ஜெயக்குமார் மட்டுமே நன்றியை மறந்து நாகரீகமில்லாமல் பேசுவதாக அதிமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதிமுக அம்மா அணி துணைப்பொதுச்செயலாளர் டிடிவி. தினகரனை பேச்சாளர் நாஞ்சில் சம்பத் சென்னையில் இன்று சந்தித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அதிமுகவில் என்றுமே தினகரன் உள்ளதாக தெரிவித்தார். தினகரன் இல்லாத கட்சி இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

மேலும் நாஞ்சில் சம்பத் கூறியதாவது:
கட்சியும், ஆட்சியும் ஊனமடைந்துவிடக்கூடாத என்பதற்காகவே டிடிவி தினகரன் அமைதியாக இருக்கிறார். கட்சியை ஒருங்கிணைத்து நிச்சயம் இரட்டை இலை சின்னத்தை அவர் பெற்றெடுப்பார். டிடிவி தினகரனுக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவாக உள்ளனர்.
தினகரனை வந்து சந்தித்த எம்எல்ஏக்கள் மட்டுமல்ல அனைத்து எம்எல்ஏக்களின் ஆதரவுமே டிடிவி. தினகரனுக்குத் தான் உள்ளது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தன்னுடைய நிலைப்பாட்டை சொல்லி இருக்கிறார் அதில் தவறு இல்லை.
அமைச்சர் ஜெயக்குமார் மட்டுமே டிடிவி. தினகரனுக்கு எதிரான கருத்துகளை சொல்லி வருகிறார். அவர் நன்றி மறந்து நாகரீகமற்ற முறையில் பேசுகிறார். மற்ற அமைச்சர்களை முன்நிறுத்தி அமைச்சர் ஜெயக்குமார் தன்னை பாதுகாத்துக்கொள்ள நினைக்கிறார். கட்சியை சேர்ந்த ஒருவர் கூட சந்திக்க மாட்டார்கள் என்று ஜெயக்குமார் சொன்னார், ஆனால் இப்போது சாரைசாரையாக கட்சியினர் வந்து செல்கின்றனர் இதற்கு ஜெயக்குமார் என்ன சொல்வார்.
எல்லோருமே வந்து தினகரன் சந்திக்கும் காலம் விரைவில் வரும். தமிழகத்தில் விரைவில் தேர்தல் வரும் என்று 'பச்சைத் துரோகி' ஓ.பிஎஸ்சும், ஸ்டாலினும் மட்டுமே சொல்லி வருகிறார்கள், அவர்களின் எண்ணம் பலிக்காது. முதல்வரின் பதவியே தனது வாழ்க்கை என்று சிலர் நினைக்கிறார்கள் அவர்களைப் போல அல்ல டிடிவி. தினகரன் கட்சிக்காக பொறுமைகாக்கும் தலைவர். தேர்தல் நடைபெறுவது மக்களுக்கு நல்லதல்ல. வீணான பணச்செலவு ஏற்படும். அப்படியே தேர்தல் வந்தாலும் அதில் நிச்சயம் அதிமுக அம்மா அணி தான் வெற்றி பெறும்.
இவ்வாறு சம்பத் கூறினார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications