ஸ்டாலினுடன் அதிமுக ஆதரவு எம்எல்ஏக்கள் மீண்டும் சந்திப்பு!
திமுக செயல்தலைவர் ஸ்டாலினை அதிமுக ஆதரவு எம்எல்ஏக்கள் கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் திடீரென சந்தித்தனர்.
சென்னை: திமுக செயல்தலைவர் ஸ்டாலினை அதிமுக ஆதரவு எம்எல்ஏக்கள் கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் திடீரென சந்தித்தனர். அப்போது அவர்கள் ஸ்டாலினை நலம் விசாரித்ததாக தெரிகிறது.
எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல்தலைவரும் ஸ்டாலின் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கண் சிகிச்சைக்காக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சங்கரநேத்ராலயா கண்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கண்ணில் லென்ஸ் பொருத்தப்பட்டது.

இதன் காரணமாக ஸ்டாலின் இரண்டு நாட்கள் சட்டசபைக்கு வராமல் இருந்தார். இந்நிலையில் இன்று சட்டசபைக்கு வந்த அவரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் நலம் விசாரித்தனர்.
இதைத்தொடர்ந்து சட்டசபை வளாகத்தில் ஸ்டாலினை அதிமுக ஆதரவு எம்எல்ஏக்கள் ஆன கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் சந்தித்தனர். அப்போது ஸ்டாலினிடம் அவர்கள் நலம் விசாரித்ததாக தெரிகிறது.
சசிகலா அணி ஆட்சியமைக்க கோடிக் கணக்கில் எம்எல்ஏக்கள் பணம் பெற்றதாக எழுந்த புகாருக்கு பின் 3 எம்எல்ஏக்களும் ஸ்டாலினுடன் அதிக நெருக்கம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications