சசிகலா படத்தை கிழித்த அதிமுக பிரமுகர்... செஞ்சியில் பரபரப்பு

விழுப்புரம் அருகே விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த சசிகலாவின் படத்தை அதிமுக பிரமுகர் ஒருவர் கிழித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: செஞ்சியில் நடைபெற்ற விழாவில் மேடையில் கட்டப்படிருந்த சசிகலாவின் படத்தை அதிமுக பிரமுகர் ஒருவர் கிழித்தார். அவரை போலீசார் இழுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவரது தோழியான சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்றார். இதையடுத்து கட்சி முழுவதும் மன்னார்குடி கும்பலின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது.

ADMK worker torn Sasikala banner in Vilupuram

சசிகலாவுக்கு கட்சியினர் சிலர் ஆதரவு தெரிவித்தாலும் பெரும்பாலான தொண்டர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அப்படியே ஜெயலலிதாவை காப்பியடிக்கும் சசிகலாவை அவரது இடத்தில் வைத்துப் பார்க்க பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அதிமுகவின் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் விழா மேடையில் சசிகலாவின் போடப்பட்ட பேனர் கட்டப்பட்டிருந்தது.

இதனை அப்பகுதி அதிமுக பிரமுகர் ஒருவர் கிழித்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அந்த பிரமுகரை போலீசார் இழுத்துச்சென்றனர். அதிமுக பிரமுகரே சசிகலாவின் படத்தை கிழித்தது அப்பகுதி அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+