For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரூபாய் நோட்டில் காந்திப் படம் கூடாது... வழக்கு போட்டவருக்கு ரூ. 10,000 அபராதம்!

ரூபாய் நோட்டில் காந்தி படத்தை நீக்கக் கோரி முருகானந்தம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை : ரூபாய் நோட்டில் காந்திப்படத்தை நீக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் வழக்கு தொடர்ந்தவருக்கு ஹைகோர்ட் அபராதம் விதித்துள்ளது.

ரூபாய் நோட்டுகளில் காந்திப்படம் இடம்பெறுவதற்கு தடை கோரி ராமநாதபுரத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். கள்ளநோட்டு, ரூபாய் நோட்டுகளில் காந்தியின் படம் இடம்பெறுவதால் அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுகிறது என்று மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.

Madras HC fined a petitioner seeking ban to print Gandhiji image in rupee notes

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அரசியல் சட்டப்படி தீவிர ஆலோசனைக்குப் பிறகே காந்தியின் படம் ரூபாய் நோட்டில் இடம்பெறுவதாக கூறினர். இதனையடுத்து வழக்கு தொடர்ந்த முருகானந்தத்திற்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.

English summary
Madras highcourt rejected the plea seeking restriction from Gandhi image printing in Rupee notes, judges rejected teh plea and fined the petitioner to pay Rs.10,000.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X