சென்னையில் களைகட்டும் ‘நமோ’ மீன்கடை…. கோழிக் கறி கடை திறக்குமோ காங்கிரஸ்?
சென்னை: பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பெயரில் ‘நமோ நடமாடும் மீன் கடை' சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது. இங்கு ஒரு கிலோ வஞ்சிரம் (உயிருடன்) மீன் ரூ.500-க்கு விற்கப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க, அரசியல் கட்சியினர் பிரச்சார உத்தியை பலவிதமாக மாற்றி வருகின்றனர். பாஜகவினர், டீக்கடை, மீன்கடை என மக்கள் அதிகம் கூடும் இடங்களை குறிவைத்து பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர்.
தமிழ்நாடு மாநில பாஜக மீனவர் பிரிவு சார்பில், "நமோ நடமாடும் மீன் கடை" திறப்பு விழா மாநில மீனவர் பிரிவு தலைவர் எஸ்.சதீஷ்குமார் தலைமையில் சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கலந்துகொண்டு நமோ நடமாடும் மீன் கடையை திறந்து, மீன் விற்பனையை தொடங்கி வைத்துப் பேசினார்.

தேநீர் விற்ற மோடி
சிறு வயதில் தான் தேநீர் விற்றதை நரேந்திரமோடி பெருமையாக சொல்கிறார். அதை காங்கிரஸ் தலைவர்கள் பண்பாடு இல்லாமல் பேசுகிறார்கள்.
சாமானியரை பிரதமராக அமர்த்திப் பார்க்க பாஜக ஆசைப்படுகிறது. பாஜகவினர் நமோ டீக்கடைக்குப் பிறகு இப்போது நமோ மீன் கடை திறக்கிறார்கள் என்றார்.

மீனவர் குடியிருப்புகளுக்கு
மீனவர்கள் வசிக்கும் பகுதியில் ரிசார்ட்டுகளை கட்டுவதற்காக புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதை பாஜக கண்டிக்கிறது என்றார்.

35 இடங்களில் திறக்க முடிவு
"நமோ நடமாடும் மீன் கடை தமிழகம் முழுவதும் 35 இடங்களில் தொடங் கப்படும்" என்று மாநில மீனவர் அணித் தலைவர் சதீஷ்குமார் தெரிவித்தார்.

குறைந்த விலையில்
நமோ மீன்கடையில் ஒரு கிலோ வஞ்சிரம் மீன் 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல தனியார் கடைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் மீன்கள் எல்லாம் குறைந்த விலையில் கிடைப்பதால் நமோ மீன்கடைக்கு பொதுமக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது.

பெண்கள் எதிர்ப்பு
நமோ நடமாடும் மீன் கடையில் விற்பனை நடந்தபோது, பட்டினப்பாக்கம் கடற்கரையில் மீன் விற்பனையில் ஈடுபட்டிருந்த பெண்கள் திடீரென விழா நடைபெற்ற இடத்துக்கு வந்து, ‘எங்கள் வியாபாரத்தைக் கெடுக்காதீர்கள்' என்று பலமாகக் கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் சமாதானப் படுத்தினர்.

காங்கிரஸ் கட்சி?
நமோ டீ கடைக்குப் போட்டியாக காங்கிரஸ் கட்சியினர் ‘ராகா' பால் விற்பனைக் கடைகளை திறந்தனர். இப்போ நமோ மீன் கடைக்குப் போட்டியாக கறிக்கோழி கடை திறப்பாங்களோ? என்பது பொதுமக்களின் கேள்வியாகும்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications