தென்காசி ஸ்ட்ராங் ரூம் கேமராக்களை பதம் பார்த்த இடி, மின்னல்? திடீரென செயலிழப்பு.. கலெக்டர் ஆய்வு
தென்காசி: தென்காசியில் வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் அறையில் 95 சிசிடிவி கேமராக்கள் திடீரென செயல் இழந்தன. இதையடுத்து உடனடியாக தென்காசி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து மாற்று கேமராக்கள் கொண்டுவந்து பொருத்தப்பட்டது.
தென்காசியில் இன்று இடி, மின்னலுடன் மழை பெய்ததால், வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் உள்ள 95 சிசிடிவி கேமராக்கள் செயல் இழந்ததாகவும், உடனடியாக மாற்று சிசிடிவி கேமராக்கள் கொண்டு வந்து பொருத்தப்பட்டது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

லோக்சபா தேர்தல்: தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில், வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த தொகுதிகளில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன. ஸ்ட்ராங் ரூம் எனப்படும் அறையில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மூன்றடுக்கு பாதுகாப்புடன் 24 மணி நேரமும் வாக்குப்பதிவு இயந்திரங்களை சிசிடி கேமிரா மூலம் கண்காணிக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
95 கேமராக்கள் செயலிழப்பு: ஸ்ட்ராங் ரூம் அருகே வைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே சிசிடிவி மூலாமக ஸ்ட்ராங் ரூம் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். கட்சிகளின் முகவர்களும் இதை உறுதி செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தென்காசி லோக்சபா தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தென்காசியில் வைக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள ஸ்ட்ராங் ரூமில் 128 கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இதில், 95 சிசிடிவி கேமராக்கள் திடீரென செயல் இழந்தது. உடனடியாக இதுதொடர்பாக தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோருக்கு தெரியப்படுத்தப்பட்டது. அதன்படி உடனடியாக அங்கு வந்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், உடனடியாக மாற்று சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை மேற்கொண்டார்.
இடி, மின்னல் காரணம்?: இதையடுத்து மாற்று கேமராக்கள் பொருத்தப்பட்டனர். தென்காசியில் இடி, மின்னலுடன் மழை பெய்த போது கேமராக்கள் செயல் இழந்திருக்கலாம் என்று கூறப்பட்டது.
முன்னதாக சனிக்கிழமை நீலகிரியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்கள் திடீரென செயலிழந்தது. ஸ்ட்ராங் ரூமில் உள்ள கேமிராக்கள் சுமார் 20 நிமிடங்கள் அரசியல் கட்சிகளின் முகவர்கள் அமர்ந்து கண்காணிக்கும் அறையில், சிசிடிவி கேமிரா பதிவுகளை காணக்கூடிய திரையில் எந்தக் காட்சியும் ஒளிபரப்பாகாமல் இருந்ததால் அரசியல் கட்சி முகவர்களிடையே பெரும் பரபரப்பு உண்டானது.
நீலகிரி ஸ்ட்ராங் ரூம்: 20 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் வழக்கம் போல் செயல்பட தொடங்கியது. இந்த நிலையில், அதீத வெப்பம் காரணமாகவே, சிசிடிவி கேமரா காட்சிகள் பதிவாகும் பெட்டி சூடாகி, செயலிழந்திருக்கக்கூடும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா கூறுகையில், "வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக தான் உள்ளது. இதில் ஏதும் சந்தேகம் கொள்ள தேவையில்லை. அப்படி, சந்தேகம் இருந்தால் கட்சியினரை அழைத்து சென்று காட்ட தயாராக உள்ளோம்" என்று கூறினார்.
ஈரோடு ஸ்ட்ராங் ரூம்: நீலகிரியை தொடர்ந்து ஈரோடு லோக்சபா தொகுதிக்கான வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் அறையில் உள்ள ஒரு சிசிடிவி கேமிரா செயலிழந்தது. இதையடுத்து ஒருமணி நேரத்தில் வேறு கேமரா பொருத்தப்பட்டதாகவும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிசிடிவி கேமரா செயலிழந்ததாகவும் அம்மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்தார்.
இது தொடர்பாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் கன்கராம் கூறுகையில், "ஒரு ஸ்ட்ராங் ரூமிற்கு 8 கேமராக்கள் என்ற வீதத்தில் 6 ஸ்ட்ராங் ரூமிற்கு 48 கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது. ஸ்ட்ராங் ரூம் மட்டுமின்றி வெளியே என அனைத்தையும் சேர்த்து 220 சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது. ஒன்று பழுதானாலும் உடனடியாக மாற்றப்படும்.
தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே ஒரு சிசிடிவி கேமிரா வொர்க் ஆகாமல போனது. உடனடியாக சுமார் 1 மணி நேரத்தில் அதற்கு பதிலாக வேறு ஒரு சிசிடிவி கேமிரா பொருத்துப்பட்டுவிட்டது. வாக்குப்பதிவு எந்திரங்கள் முழு பாதுகாப்புடன் பத்திரமாக வைக்கப்படுள்ளது" என்று கூறினார்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications