13 ஆண்டுகளுக்குப் பின்னர் திமுகவுக்கு ஆதரவு தந்த மதிமுக.. திருப்பம் ஏற்படுமா?
தமிழக அரசியலில் 13 ஆண்டுகளுக்குப் பின்னர் தேர்தல் களத்தில் திமுகவுக்கு ஆதரவை தந்துள்ளது மதிமுக.
சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் 13 ஆண்டுக்குப் பின்னர் திமுகவுக்கு மதிமுக ஆதரவை தந்துள்ளது.
2001-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக தோல்வியைத் தழுவியது. இதனைத் தொடர்ந்து 2004-ம் ஆண்டு காங்கிரஸ், பாமக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் என மிகப் பிரமாண்ட கூட்டணியை திமுக அமைத்தது.
அப்போது 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அதற்குப் பின்னர் 2006 சட்டசபை தேர்தலில் அதிமுக அணியில் மதிமுக இணைந்தது.

திமுகவுக்கு பின்னடைவு
திமுகவும் அடுத்தடுத்த சட்டசபை, லோக்சபா தேர்தல்களில் மெகா கூட்டணி அமைக்க முயற்சித்தது. ஆனால் பலன் கிடைக்காமல் போனது. இது திமுகவுக்கு பின்னடைவை தொடர்ந்து தந்து வந்தது.

தேர்தல் புறக்கணிப்பில் மதிமுக
2011 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் மதிமுக இடம்பெற்றிருந்தது. ஆனால் கடைசிநேர குழப்பங்களால் தேர்தலையே புறக்கணித்தது மதிமுக. 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மதிமுக இடம் பெற்றது.

மந கூட்டணி
2016 சட்டசபை தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி மக்கள் நலக் கூட்டணியில் மதிமுக போட்டியிட்டது. ஆனால் தேர்தலுக்குப் பின்னர் மக்கள் நலக் கூட்டணி சிதறியது. அண்மைக்காலமாக திமுகவுடன் வைகோ நெருக்கம் பாராட்டி வந்தார். இந்த நிலையில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற்றது.

வைகோ ஸ்டாலின் சந்திப்பு
அப்போதும் கூட திமுகவால் இடதுசாரிகள் உள்ளிட்ட பிற கட்சிகளின் ஆதரவை திரட்ட முடியாமல் போனது. இதன்பின்னர் திமுகவுடன் வைகோ நெருக்கம் பாராட்டி வந்தார். திமுக செயல் தலைவர் ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலர் அடிக்கடி சந்தித்து பேசி வந்தார்.

திமுகவுக்கு மதிமுக ஆதரவு
இந்நிலையில் வரும் 21-ந் தேதி ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தொகுதியில் திமுக வேட்பாளர் மருதுகணேஷை காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் ஆதரிப்பதாக அறிவித்துள்ளன. மதிமுக பொதுச்செயலர் வைகோவும் இன்று திமுகவுக்கு ஆதரவு தருவதாக அறிவித்துள்ளார். 13 ஆண்டுகாலத்துக்குப் பின்னர் திமுகவுக்கு தேர்தல் களத்தில் மதிமுக தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications