பஞ்சாப் நேஷனல் வங்கியை போல் சென்னை சிட்டி யூனியன் வங்கியில் ரூ.12 கோடி மோசடி
பஞ்சாப் நேஷனல் வங்கியை போல் சென்னை சிட்டி யூனியன் வங்கியில் ரூ. 12 கோடி மோசடி நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
சென்னை: சென்னை சிட்டி யூனியன் வங்கியில் பணம் செலுத்தும் முறை மூலம் 3 முறை மோசடியாக பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அந்த வங்கி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மிகப் பெரிய வங்கிகளுள் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 11, 400 கோடி பணம் முறைகேடாக பரிவர்த்தனை செய்யப்பட்டது. மிகப் பெரிய தொகை என்பதால் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை யூனியன் வங்கியின் பதிவேடுகளில் பணம் செலுத்தியதற்கான எந்த வித பதிவும் இல்லாமல் ரூ.12.8 கோடி முறைகேடு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

பாதுகாப்பான முறை
இவை ஸ்விப்ட் நிதி முறையின் படி அதாவது சர்வதேச வங்கிகளின் நிதி தொடர்பு அமைப்பு (SWIFT), உலகம் முழுவதும் உள்ள நிதி நிறுங்களில் செய்யப்படும் நிதி பரிமாற்றம் குறித்து தகவலை பெறுவதற்கும், அனுப்புவதற்கும் பயன்படுகிறது. இது மிகவும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான முறையாகும்.

தகவல் அனுப்பப்பட்டுள்ளது
இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கூறுகையில் இந்த முறை மூலம் மற்ற வங்கிகளுக்கு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது குறித்து கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி கண்டறிந்தோம். இதையடுத்து பணத்தை திருப்பி செலுத்துமாறு சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு தகவல் அனுப்பியுள்ளோம் என்று தெரிவித்தனர்.

திருப்பி செலுத்துதல்
3 பண பரிமாற்றத்தில் ஒன்று நியூயார்க்கில் உள்ள ஸ்டான்டர்ட் சார்ட்ர்ட் வங்கி மூலமாக துபாய் வங்கிக்கு 5 லட்சம் அமெரிக்க டாலர்கள் செலுத்தப்பட்ட பணத்தை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டு சிட்டி யூனியன் வங்கிக்கே செலுத்தப்பட்டது.

சீன வங்கி
இரண்டாவதாக பிராங்க்பர்ட்டில் உள்ள ஸ்டான்டர்ட் சார்ட்ர்ட் வங்கி மூலமாக துருக்கி வங்கிக் கணக்கிற்கு 3.7 லட்சம் அமெரிக்க டாலர்களும், மூன்றாவது நியூயார்க்கில் உள்ள பாங்க் ஆப் அமெரிக்கா மூலம் சீன வங்கிக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்களும் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பணத்தை திரும்ப பெற மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications