அங்கிட்டு ஜெ.வின் சிறுதாவூர் பங்களா தீ விபத்து.. இங்கிட்டு கொடநாடு பங்களாவில் கொலை.. மக்கள் பீதி

ஜெயலலிதா தங்கியிருந்த பகுதிகளில் நடைபெறும் இந்த அசாதாரண சம்பவங்கள் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான சிறுதாவூர் பங்களா அருகே தீ விபத்து ஏற்பட்டு ஒரு வாரம் கூட ஏற்படாத நிலையில், அவரது கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் அருகே உள்ள சிறுதாவூர் பகுதியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான பங்களா உள்ளது. ஓய்வு எடுப்பதற்காக ஜெயலலிதா இங்கு அடிக்கடி வந்து தங்கிச் செல்வது வழக்கம்.

இந்நிலையில் சிறுதாவூர் பங்களா அருகில் உள்ள 9 ஏக்கர் புல்வெளியில் கடந்த 19ம் தேதி திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தீயணைப்பு

தீயணைப்பு

தகவல் அறிந்ததும் 3 வாகனங்களில் அங்கு சென்ற தீயணைப்புத் துறையினர் உடனடியாக தீயை அணைத்தனர். தீயணைப்பு துறையின் துரித நடவடிக்கையால், ஜெயலலிதாவின் பங்களாவிற்கு எந்த சேதமும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.

ஆவணங்கள் நாசம்?

ஆவணங்கள் நாசம்?

சிறுதாவூர் பங்களா அருகே தீ விபத்து ஏற்பட்டதால், அங்கிருந்த ஆவணங்களை யாரேனும் எரித்திருக்க கூடுமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. இருப்பினும் பிறகு அதுகுறித்த எந்த புகாரும் இதுவரை எழவில்லை.

கொடநாட்டில் கொலை

கொடநாட்டில் கொலை

ஆனால் இந்த தீவிபத்து நடந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் காவலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

காவலாளி

காவலாளி

ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட், நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு காவலாளியாக பணியாற்றி வந்த ஓம்பகதூர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். மற்றொரு காவலாளி கிஷண்பகதூர் என்பவர் படுகாயங்களுடன் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மக்கள் பீதி

மக்கள் பீதி

கொடநாடு எஸ்டேட்டில் முக்கியமான ஆவணங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம். அந்த ஆவணங்களை அபகரிக்க முயன்றபோது இந்த சம்பவங்கள் நிகழ்ந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் ஜெயலலிதா தங்கியிருந்த பகுதிகளில் நடைபெறும் இந்த அசாதாரண சம்பவங்கள் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. அனைத்தும் ஒருவகை மர்மத்தோடேயே உள்ளது. போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் என்பது பொதுமக்கள் எண்ணமாக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+