"கோழி மிதித்து குஞ்சு சாகுமா?"... அழகிரி ஆதரவாளரின் புதிய போஸ்டர்!!
மதுரை: மதுரை மாநகர் மாவட்ட திமுகவே கலைக்கப்பட்டது.. 5 முக்கிய பிரமுகர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். ஆனாலும் அழகிரி ஆதரவாளர்களின் திமுக தலைமையை விமர்சிக்கும் போஸ்டர் யுத்தம் தொடரத்தான் செய்கிறது..
மதுரையில் திமுக தென்மண்டல அமைப்புச் செயலர் மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள் அசத்தலான வசனங்களுடன் ஒட்டும் போஸ்டர்கள்தான் அக்கட்சி தலைமைக்கு பெரும் தலைவலியாகவே இருந்து வருகிறது.. குறிப்பாக திமுக பொருளாளர் ஸ்டாலினை விமர்சிக்கும் வகையிலான போஸ்டர்களை விதம் விதமாக ஒட்டப் போய் விஸ்வரூபமானது.

இதன் உச்சமாக மதுரை மாநகர் மாவட்ட திமுக அமைப்புகள் கூண்டோடு கலைக்கப்பட்டன. ஆனாலும் "டோன்ட் வொர்ரி" என்ற தலைப்பில் புது போஸ்டர்களை அடித்து அடுத்த குடைச்சலைக் கொடுத்தனர். இந்த போஸ்டரை அடித்த கவுன்சிலர் முபாரக் மந்திரி உட்பட அழகிரியின் 5 ஆதரவாளர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து மு.க. அழகிரி தமது ஆதரவாளர்களுக்கு, புதிய போஸ்டர்கள் அடித்து சிக்கலை உருவாக்க வேண்டாம் என்று உத்தரவிட்டிருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது திமுக தலைமையின் நடவடிக்கையை விமர்சிக்கும் வகையில் மற்றொரு போஸ்டரை மதுரை 83வது வார்டு கவுன்சிலர் மாணிக்கம் ஒட்டியிருக்கிறார். அவர் " அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" என்று அடித்திருக்கும் போஸ்டரின் தலைப்பு "கோழி மிதித்து குஞ்சு சாகுமா?" , இதில் வழக்கம் போல அழகிரி படம் இடம்பெறவில்லை. கருணாநிதி, அன்பழகன் ஆகியோர் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.
அத்துடன் தாய்க்கோழி தமது குஞ்சுகளை அடைகாக்கும் புகைப்படம் ஒன்றும் அழகாக அச்சிடப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே கொந்தளிப்பில் இருக்கும் திமுக தலைமையை மேலும் சீண்டுவது போல் இந்த போஸ்டர் இருப்பதாக ஸ்டாலின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
இதனிடையே சர்ச்சைக்குரிய போஸ்டர்களை அடித்து ஒட்டவேண்டாம் என்று தமது ஆதரவாளர்களுக்கு மு.க. அழகிரி உத்தரவிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா!












Click it and Unblock the Notifications