காய்ச்சி எடுக்கும் “கத்திரி” வெயில் நாளை துவக்கம் – எப்படி பாதுகாப்பது?
சென்னை: மக்களை வெப்பத்தில் வாட்டி வதைக்கப் போகும் அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் நாளை தொடங்குகிறது.
இந்த அக்கினி நட்சத்திரம் வருகிற 28 ஆம் தேதி வரை 24 நாட்கள் நீடிக்கிறது.
இந்த கால கட்டத்தில் வெயில் வாட்டி வதைக்கும்.மக்கள் அனைவரும் தங்களை வெய்யிலின் பிடியில் இருந்து பாதுகாத்துக் கொள்வது முக்கியம்.

சூரியனின் பயணம்:
சூரியன் தனது பயணத்தில் மேஷம் ராசி முதல் மீனம் ராசி வரை 12 ராசிகளில் ஒவ்வொரு ராசியிலும் ஒரு மாதம் சஞ்சரிப்பார். மேஷம் ராசி, பரணி நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் பிரவேசிக்கும் நாள் தொடங்கி ரோகிணி நட்சத்திரம் முதல் பாதத்தில் சஞ்சரிக்கும் நாள் வரையுள்ள காலத்தை அக்னி நட்சத்திரம் என்கிறோம்.

நாளை தொடங்கும் கத்திரி:
இக்காலம் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 21 ஆம் தேதி முதல் வைகாசி மாதம் 14 ஆம் தேதி வரை இருக்கும். நடப்பாண்டு சித்திரை 22 ஆம் தேதி அதாவது நாளை இரவு 7.14 மணிக்கு தொடங்கி வரும் 28 ஆம் தேதி இரவு 1.20 மணி வரை அக்னி நட்சத்திர காலமாகும். இந்த காலகட்டத்தில் சூரியன் உச்சப்பலம் பெறுகிறார். இதனால் இந்த 24 நாட்களும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

காய்ச்சிய நீர், மோர்:
கோடை காலம் தொடங்கிவிட்டதால் தண்ணீர் தாகம் அதிகரிக்கும். சாதாரண நீரை குடிப்பதற்கு பதிலாக உடம்புக்கு குளிர்ச்சி தரும் காய்ச்சி வடிகட்டிய குளிர்ந்த நீர், மோர், உப்பு போட்ட எலுமிச்சை பழச்சாறு குடிக்கலாம்.

மீன் உணவு வேண்டாம்
வெள்ளரி , தர்பூசணி மற்றும் பிறவகை பழங்கள் சாப்பிடலாம்.மீன்கள் சாப்பிடுவதால் சிலருக்கு அலர்ஜியும், சைனஸ் போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகிறது. இதனால் அக்னி நட்சத்திரம் காலகட்டத்தில் மீன்கள் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

தலையை உலர்த்தவும்:
கடும் வெயிலில் சென்றுவிட்டு வீட்டிற்கு சென்ற உடன் சிறிது நேரம் மின்விசிறியின் கீழ்அமர்ந்து தலையில் உள்ள வியர்வை காய்ந்த பின்னர் பானங்கள் அருந்துவது நல்லது.

செயற்கை பானங்கள் தவிர்ப்பு:
குளிர்பானங்களை முற்றிலுமாக தவிர்த்துவிட வேண்டும். காய்ச்சி வடிகட்டிய நீர் 10 அல்லது 15 டம்ளர் தினசரி குடிக்க வேண்டும். காரமான உணவு வகைகளை கண்டிப்பாக தவிர்ப்பது நல்லது.

இயற்கை நடைமுறைகள்:
கோடை காலங்களில் இவற்றை கடைப்பிடிப்பதன் மூலம் அக்னி நட்சத்திர வெப்பத்திலிருந்து ஓரளவு நம்மை காத்துக் கொள்ள முடியும் என்று இயற்கை மருத்துவர்கள் கூறுகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications