வாவ்.. சென்னை விமான நிலையத்தில் ஏஐ தொழில்நுட்பம்.. இனி டிக்கெட் காட்ட வேண்டாம் பாஸ்!
சென்னை கிண்டி ஏர்போர்ட்டில் புதிதாக ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.
சென்னை: சென்னை கிண்டி ஏர்போர்ட்டில் புதிதாக ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.
இதனால் விமான நிலையத்தில் இனி பணிகள் வேக வேகமாக முடிக்கப்படும். இதனால் பயணிகளின் ஆவணங்கள் சோதனை செய்யப்படும் நேரம் மொத்தமாக குறையும்.
ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் தொழில்நுட்பம் என்பது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆகும். இதன் மூலம்தான் தற்போது பல முக்கியமான தொழில்நுட்ப கருவிகள் இயங்குகிறது. போன்கள், கணினிகள் எல்லாம் இதன் மூலமே இயங்குகிறது.

என்ன தொழில்நுட்பம்
சென்னையில் விமான நிலையத்தில் இந்த ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட பேஸ் ரெக்கக்னிஷேஷன் (face recognition) கருவிகள் பொருத்தப்படும். இந்த கருவிகள் நம்முடைய முகத்தை பார்த்து நம்மை சோதனை செய்யும். அதை வைத்து அதுவே ஆவணங்களை சோதனை செய்து நம்மை அனுப்பிவிடும்.

எப்படிப்பட்ட தொழில்நுட்பம்
பேஸ் ரெக்கக்னிஷேஷன் (face recognition) எனப்படும் தொழில்நுட்பம் தற்போது பல ஆண்டிராய்ட், ஆப்பிள் போன்களில் உள்ளது. நம்முடைய முகத்தை ஸ்கிரீன் முன் காட்டினால் அதுவே நம்மை அடையாளம் கண்டுபிடித்து, கதவுகளை திறந்துவிடும். இதை தான் தற்போது சென்னை விமான நிலையத்தில் கொண்டு வர இருக்கிறார்கள்.

எப்படி செயல்படுவார்கள்
சென்னை விமான நிலையத்தில் சில முக்கியமான சேவைகள் மட்டும் எப்போதும் போல நடக்கும். சில விமான சேவைகள் தவிர்த்து மற்ற சேவைகளுக்கு ஆவணங்களை இனி பயன்படுத்த மாட்டார்கள். பழைய முறைப்படி செய்யப்படும் ஆவண சோதனைகளை மொத்தமாக நிறுத்த போகிறார்கள். அதற்கு பதிலாகதான் இந்த பேஸ் ரெக்கக்னிஷேஷன் (face recognition) கருவிகளை வைக்க போகிறார்கள்.

எப்படி செயல்படும்
இந்த சோதனை மூலம் நாம் விமானத்தில் பயணிக்க வேண்டுமானால், இதற்கென்று ஒரு அக்கவுண்ட் உருவாக்க வேண்டும். அதில் நம்முடைய முகம், கண் உள்ளிட்டவைகளின் அடிப்படை தகவல்களை அளிக்க வேண்டும். அதை வைத்து நாம் பயணிக்கலாம். உதாரணமாக நாம் டிக்கெட் எடுத்துவிட்டு அந்த தகவல்களை அந்த அக்கவுண்டில் பதிவேற்றிவிட்டு, நம்முடைய முகத்தை மட்டும் விமான நிலையத்தில் காட்டிவிட்டு செல்லலாம்.

என்ன பயன்
இதன் மூலம் பணிகள் மிகவும் வேகமாக நடக்கும். எந்த கவுண்டரிலும் நீங்கள் நிற்க வேண்டியது இல்லை. இதனால் பெரிய அளவில் பாதுகாப்பு ஏற்படும். அதேபோல் ஒரு நொடியில் நீங்கள் யார், உங்கள் பின்புலம் என்னவென்று அதிகாரிகளுக்கு தெரியும்.

நாம் என்ன செய்ய வேண்டும்
இது மிக மிகவும் எளிமையானது. முதலில் சென்னை விமான நிலைய அதிகாரிகள் கொடுக்கும் இணைய பக்கத்தில் நமக்கு என்று அக்கவுண்ட் உருவாக்க வேண்டும். பின் அதில் நம்முடைய டிக்கெட் விவரங்களை ஏற்ற வேண்டும். பின் விமான நிலைய பேஸ் ரெக்கக்னிஷேஷன் (face recognition) சாதனம் முன் போய் நின்றால் அதுவே நம் விவரங்களை வைத்து சோதனைகளை முடித்துவிடும். ஆதாருடன் பாஸ்போர்ட்டை இணைத்து இருக்கும் பட்சத்தில் அந்த சோதனையையும் முடித்துவிடும்.

எப்போது
ஆசியாவிலேயே இந்த முறை எங்குமே கிடையாது. முதல்முறையாக பெங்களூரில்தான் அடுத்து வருடம் தொடக்கத்தில் கொண்டு வரப்பட உள்ளது. அதன்பின்தான் சென்னையில் அடுத்த வருடம் மார்ச் மாதம் கொண்டு வரப்பட உள்ளது.
-
IPL 2026: அடேங்கப்பா..! ஐபிஎல் பரிசுத்தொகை எவ்வளவு? வைபவ் சூர்யவன்ஷி காட்டில் கொட்டிய பணமழை! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications