உள்ளே ஐடி ரெய்டு...வெளியே ஜூனியர் சிஎம் விவேக் வாழ்க...ஜெயா டிவி முன்பு முழக்கம் போட்ட அடிவிழுதுகள்!
ஜூனியர் சிஎம் விவேக் வாழ்க என ஜெயா டிவி வருமான வரிசோதனையின் போது அவரது ஆதரவாளர்கள் முழக்கமிட்டுள்ளனர்.
Recommended Video

சென்னை: ஜெயா டிவி சேனலில் உள்ளே ரெய்டு நடந்து கொண்டிருக்கும் போது வெளியே ஜூனியர் சி.எம். விவேக் வாழ்க என அவரது ஆதரவாளர்கள் முழக்கம் எழுப்பிய விவகாரத்தை அரசின் பார்வைக்கு கொண்டு சென்றிருக்கிறதாம் உளவுத்துறை.
வருமான வரித்துறை சோதனையால் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் சசிகலா குடும்பத்தின் ஜூனியர்களான விவேக்கும் ஜெயானந்தும். ஊடக வெளிச்சம் தங்கள் மீது படுவதை ரொம்பவே ரசித்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த ஊடக வெளிச்சத்தை எப்படியாவது அறுவடை செய்து கொண்டு அதிமுக(அம்மா) கட்சியில் ஆதரவாளர்களை அணிசேர்த்துவிட வேண்டும் என்கிற முனைப்பில் இருவருமே தீவிரமாக இருக்கின்றனர்.
இந்நிலையில் விவேக் தொடர்பாக சில விஷயங்களை அரசின் கவனத்துக்கு உளவுத்துறை கொண்டு சென்றுள்ளது. அதில் முக்கியமாக, ஜெயா டிவியில் உள்ளே ரெய்டு நடந்து கொண்டிருந்த போது சுழற்சி முறையில் சிலர் அந்த அலுவலகத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டிருக்கின்றனர்.
அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட்டே அவ்வப்போது "ஜூனியர் சி.எம். விவேக் வாழ்க" என்பதுதானாம். விவேக்குகும் அதிமுகவில் ஆதரவாளர்கள் இருக்கிறது எனக் காட்டுவதற்காக ஒரு சீனியர் பத்திரிகையாளர் கொடுத்த ஐடியாவில்தான் இப்படி நிறுத்தப்பட்டு முழக்கம் எழுப்பினார்கள் என்கிறது உளவுத்துறை அறிக்கை.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications