திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் சீனிவேல் மருத்துவமனையில் அனுமதி
மதுரை: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் சீனிவேல் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் கடந்தமுறை அதிமுக போட்டியிடவில்லை. அப்போதைய கூட்டணிக் கட்சியான தேமுதிக சார்பில் ஏ.கே.டி.ராஜா போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை இத்தொகுதியில் அதிமுக நேரடியாக களம் இறங்கியுள்ளது. அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ சீனிவேல் (65) இங்கு போட்டியிடுகிறார்.

சீனிவேல், கடைசியாக 2001-ம் ஆண்டு திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதற்குப் பின் அவருக்கு இந்த தொகுதியில் வாய்ப்பு கிடைக்காததால் தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கியே இருந்தார். தற்போது அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் கட்சியினர் அதிருப்தி அடைந்தனர். கட்சியினரின் அதிருப்தியையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார் சீனிவேல்.
இந்நிலையில், அவருக்கு நேற்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சீனிவேல் பக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும். தற்போது அவரின் உடல் நிலை தேறி வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ள நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதி வேட்பாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அக்கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை?












Click it and Unblock the Notifications