பாஜக கூட்டணிக்கு பின் முதல் முறையாக ஏப். 25-ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்- எதிர்ப்பு எழுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இணைந்த பிறகு முதல் முறையாக அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 25-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. பாஜகவுடனான கூட்டணிக்கு அதிமுகவில் மூத்த நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலை அதிமுக, பாஜக தனித்தனியே சந்தித்து பெரும் தோல்வியைத் தழுவின. இதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்காக பாஜக தலைமையிலான கூட்டணியில் அதிமுக இணைந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக ஒருபோதும் பாஜகவுடன் கூட்டணியே கிடையாது என கூறிவந்த நிலையில் அக்கட்சியுடன் மீண்டும் அதிமுக கூட்டணி அமைத்தது. இதனால் அதிமுகவிலேயே மூத்த தலைவர்கள் சிலர் கடும் எதிர்ப்பும் தெரிவித்ததாக கூறப்பட்டது.

admkk

பாஜகவுடனான கூட்டணிக்கு எதிராக அதிமுக நிர்வாகிகள் சிலர் ராஜினாமா செய்தும் வருகின்றனர். இந்த நிலையில் அதிமுகவின் செயற்குழு கூட்டம் மே 2-ந் தேதி நடைபெறும் அறிவிக்கப்பட்டது. அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் பாஜக கூட்டணி குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து திடீரென அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு ஏப்ரல் 23-ந் தேதி சென்னையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விருந்து அளிக்க இருக்கிறார் எனவும் கூறப்பட்டது. பாஜகவுடனான கூட்டணிக்கான எதிர்ப்பை சமாளிக்க அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு எடப்பாடி பழனிசாமி விருந்து தருகிறார் என தெரிவிக்கப்பட்டது.

இந்த பின்னணியில் அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 25-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், பாஜகவுடனான கூட்டணி குறித்தும் அதிமுக செயற்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறதாம். அத்துடன் அதிமுகவின் செயற்குழு கூட்டத்தில் பாஜக கூட்டணிக்கு எதிராக எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருக்கவே முன்னதாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மற்றும் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விருந்து என அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்கிறார் எடப்பாடி பழனிசாமி என்கின்றன அரசியல் வட்டாரங்கள். இதனால் அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+