தினகரன் ஆதரவாளர்கள் டிஸ்மிஸ்- கட்சி தாவல் ஆரம்பம்? மீண்டும் உடைகிறது அதிமுக?
தினகரன் ஆதரவாளர்கள் நீக்கத்தைத் தொடர்ந்து அதிமுக மீண்டும் உடையக் கூடும் என தெரிகிறது.
சென்னை: அதிமுகவில் இருந்து தினகரன் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் 6 பேர் நீக்கப்பட்ட நிலையில் மீண்டும் அக்கட்சியில் அதகளம் தொடங்கிவிட்டது. எம்.பி. செங்குட்டுவனைப் போல ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணியில் இருந்து தினகரன் பக்கம் தாவும் படலம் தொடங்க இருப்பதால் அதிமுக மீண்டும் உடையக் கூடும் என்றே தெரிகிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவில் அடுத்த தலைமை யார் என்ற சலசலப்பு எழுந்தது. சசிகலா முன்னிறுத்தப்பட்ட நிலையில் ஓபிஎஸ் தர்மயுத்தத்தை தொடங்கினார். இது ஜெயலலிதா மறைவுக்குப் பிந்தைய முதலாவது அதிமுக பிளவு.
சசிகலா சிறைக்குப் போக தினகரன் அதிமுகவில் தலையெடுத்தார். ஆனால் அவரும் சிறைக்குப் போக தினகரன் தனிமைப்படுத்தப்பட்டார். பின்னர் முதல்வர் எடப்பாடியார் தலைமையில் அதிமுகவில் ஒரு அணி உதயமானது, இது அதிமுகவின் 2-வது பிளவு.

தனியே தினகரன்
ஒருகட்டத்தில் ஓபிஎஸ்ஸும் ஈபிஎஸ்ஸும் இணைந்தனர். தினகரன் தலைமையில் ஒரு தனி ஆவர்த்தனம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிமுக சின்னம், கொடி, கட்சி அலுவலகம் இணைந்த ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிக்கு போனது.

மீண்டும் சலசலப்பு
இதனிடையே ஆர்கே நகர் தேர்தலில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணியை தினகரன் தோற்கடித்துவிட்டார். இதனால் அதிமுகவில் மீண்டும் சலசலப்பு தொடங்கிவிட்டது. தினகரனை நேரில் சந்தித்து நேற்று வாழ்த்து தெரிவித்தார் எம்.பி. செங்குட்டுவன்.

எடப்பாடியார் எச்சரிக்கை
இந்த பிள்ளையார்சுழியைத் தொடர்ந்து இன்று தினகரன் தரப்பு 6 மாவட்ட செயலாளர்களை ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணி அதிரடியாக நீக்கியுள்ளது. அத்துடன் துரோகம் செய்தவர்கள் அனைவரையும் நீக்குவோம் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதிமுக உடைகிறது?
செங்குட்டுவன் எம்.பி.யைப் போல அடுத்தடுத்து தினகரன் பக்கம் யாரும் தாவிவிடக் கூடாது என்பதற்கான எச்சரிக்கையாகவே இந்த டிஸ்மிஸ் நடவடிக்கை பார்க்கப்படுகிறது. ஆனால் ஆர்கே நகரில் வெற்றி பெற்ற வேகத்தில் இருக்கும் தினகரன் தரப்பு, ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணியை உடைக்கும் முயற்சிகளில் மும்முரமாகவே இறங்கக் கூடும். இதனால் அடுத்து வரும் நாட்களில் அதிமுக மீண்டும் உடைந்தது....இத்தனை எம்.எல்.ஏக்கள் தினகரனுக்கு ஆதரவு என்கிற சூழ்நிலை உருவாகலாம். அதேநேரத்தில் ஆர்கே நகர் வெற்றி மூலம் டெல்லியின் படு உக்கிரப்பார்வையில் சிக்கியிருப்பதால் தினகரன் தரப்பு அடக்கியே வாசிக்கவும் சாத்தியமிருக்கிறது எனவும் கூறப்படுகிறது.
-
சென்னையில் இடி.. தவெகவில் இணையும் அதிமுக மா.செக்கள்? எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி! -
உள்கட்சி பூசலுக்கு இடையே பல்ஸ் பார்க்கும் எடப்பாடி! மாவட்ட வாரியாக கூட்டம் நடத்துவது ஏன்? பின்னணி -
அதிமுகவில் உடைந்த அடுத்த செங்கல்.. சனிக்கிழமை பனையூரில் மெயின் புள்ளி! இவரா? பரபர புதுக்கோட்டை! -
அந்த மூவரையும் சேர்க்காதீங்க.. தடுக்கும் நிர்மல்குமார்.. மதுரை தவெகவில் நடப்பது என்ன? -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
47ல் இருந்து 42ஆக வீழ்ச்சி! எடப்பாடிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி கொடுக்கும் அதிமுக எம்எல்ஏ-க்கள்! -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
வயிறு எரியுது! விஜய்யிடம் சரணடைவதை விட உயிரை விடலாம்! விஜயபாஸ்கர் மீது ஆர்பி உதயகுமார் கடும் தாக்கு! -
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்! -
பாமக போட்ட பிச்சை.. அதிமுகவைக் காப்பாற்றிய அன்புமணி! போட்டுத் தாக்கிய சிவி சண்முகம்! உண்மை என்ன? -
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்! -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்?












Click it and Unblock the Notifications