அதிமுக முன்னாள் அமைச்சர் வடிவேல் திடீர் மறைவு.. எடப்பாடி பழனிசாமி, சசிகலா இரங்கல்!
திருப்பத்தூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் வடிவேல் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா இருந்த போது அவரது அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக இருந்தவர் ஆர்.வடிவேல். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த சம்பந்திகுப்பத்தைச் சேர்ந்த வடிவேல், கடந்த 2002ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக வாணியம்பாடி தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் நாகூர் ஹனிபாவை 19 ஆயிரத்து 500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பின்னர், ஜெயலலிதா அமைச்சரவையில், ஊரக தொழில் துறை அமைச்சராக பதவி வகித்தார். அதிமுகவில் விவசாய அணியின் செயலாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார். இதையடுத்து தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாததால், அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். 82 வயதான வடிவேல் கடந்த சில வாரங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மறைந்த முன்னாள் அமைச்சர் வடிவேலுவின் உடல் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சம்பந்திகுப்பத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை சம்பந்திகுப்பம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைந்த வடிவேலுக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.
முன்னாள் அமைச்சர் வடிவேல் மறைவிற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "அதிமுக விவசாயப் பிரிவு முன்னாள் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர். வடிவேல் அவர்கள் உடல்நலக் குறைவால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன். அன்புச் சகோதரர் வடிவேல் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
சசிகலா தனது சமூகவலைதள பக்கத்தில், திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழக முன்னாள் ஊரக தொழில்துறை அமைச்சரும், கழக முன்னாள் மாநில விவசாயப்பிரிவு செயலாளருமான வடிவேல் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். அன்பு சகோதரர் வடிவேல் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
-
விசித்திரமா இருக்கே.. தமிழ்நாட்டிற்கு தாமதமாக தேர்தல் ஏன்? தேர்தல் ஆணையம் வைத்த பெரிய ‘ட்விஸ்ட்’ -
30 ஆண்டு மரபு உடைந்தது! புதுச்சேரி, தமிழ்நாட்டிற்கு.. வேறு வேறு தேதிகளில் தேர்தல்! ஏன் இந்த மாற்றம்? -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் LIVE: ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு.. மே 4ம் தேதி ரிசல்ட் -
38 நாட்களில் தமிழ்நாட்டில் தேர்தல்.. இந்த விஷயங்களை மறக்காதீங்க! முடிவை தீர்மானிக்க போவதே இதான் -
முழு கண்ட்ரோல்.. இனி பவர் ஐஏஎஸ்கள் கையில்! இன்று முதல் தேர்தல் விதிகள் அமல்! MCC என்றால் என்ன? -
சசிகலாவுக்கு விழுந்த பலத்த அடி.. அஇபுதமமுக ஆரம்பமே இப்படியா? காப்பாற்ற போகும் அந்த "பெரிய கை" யார் -
பணக்காரர்களுக்கு மட்டுமே சீட்? ₹10 கோடிக்கு லீடர் தந்த ஷாக்? திமுக, அதிமுக, தவெக கடைசி நேர கண்டிஷன் -
அதிமுக கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை இடம்? கூட்டணி கட்சிகளுடன் பேச குழு அமைத்த எடப்பாடி -
டெல்டாவில்.. முக்கிய தொகுதியிலேயே அடிவாங்கும் திமுக.. சிக்கலில் பெரிய மீன்! இவருக்கே இந்த நிலைமையா? -
கான்ஃபிடண்டா இருங்க.. விஜய் வர்றாரு! எடப்பாடிக்கு பாஜக அனுப்பிய மெசேஜ்? இதனால் தான் கிளைமேக்ஸ் லேட்? -
ஓபிஎஸ்ஸின் Ex ஆதரவாளர்கள் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, தர்மர் எம்பிக்கு பதவி! அப்போ காளியம்மாளுக்கு?












Click it and Unblock the Notifications