அதிமுக விழா மேடை சரிந்தது... அசராமல் பேசிய தங்க தமிழ் செல்வன் - வீடியோ
எங்கள் பக்கம் தொண்டர்கள் இருக்கிறார்கள். அதனால் நாங்கள் எதற்கும் அஞ்சப் போவதில்லை என்று சரிந்த விழா மேடையில் அசராமல் பேசியுள்ளார் தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ் செல்வன்.
தேனி: தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகில் தேரடியில் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் சார்பில் அதிமுக 46-வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. கூட்டம் அதிகமாகவே மேடை சரிந்தது. ஆனால் யாருக்கும் எந்த வித காயம் ஏற்படவில்லை.
அதிமுகவின் 46 வது ஆண்டு தொடக்க விழா நேற்று தேனி மாவட்டத்தில் டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச் செல்வன் தலைமையில் நடைபெற்றது. இதில் கதிகாமு உள்ளிட்ட அம்மா அணியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். பலரும் தங்க தமிழ்செல்வனுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்தினர்.

மேடையில் கூட்டம் அதிகமானது. அப்போது திடீரென மேடை சரிந்தது. பலர் கீழே விழுந்தனர். இதில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.
சரிந்த மேடையிலேயே விழா நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய தங்க தமிழ் செல்வன், மேடையில் அதிகமாக தொண்டர்கள் ஏறியதால் தான் மேடை சரிந்தது. இது தொண்டர்களின் உற்சாகத்தை காட்டுகிறதே தவிர வேறோன்றும் இல்லை என்றார்.
எங்கள் பக்கம் தொண்டர்கள் இருக்கிறார்கள். அதனால் நாங்கள் எதற்கும் அஞ்சப் போவதில்லை என்று கூறினார் தங்கத்தமிழ் செல்வன்.


Click it and Unblock the Notifications
