நாளை முதல் வரும் 9-ம் தேதி வரை மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்திக்கிறார் சசிகலா !
அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்திக்க சசிகலா அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மாவட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஜனவரி 4 ஆம் தேதி முதல் ஜனவரி 9 ஆம் தேதி வரை மாவட்ட வாரியாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் பொதுச்செயலராகிவிட்ட சசிகலா அடுத்தது முதல்வர் பதவியை கைப்பற்ற வியூகம் வகுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மூத்த நிர்வாகிகளும் சசிகலா முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மணிகண்டன், தங்கமணி ஆகியோருடன் சசிகலா இன்று மாலை ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் கட்சிப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக மாவட்ட வாரியாக அதிமுக நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா அறிவித்துள்ளார்.
மாவட்ட, நகர, பேரூராட்சி உள்ளிட்ட அனைத்து செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது . சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜனவரி 4-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
ஜனவரி 4-ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற உள்ளது.
ஜனவரி 6-ம் தேதி விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், சேலம், ஈரோடு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து 7-ம் தேதி நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை மாநகர், புறநகர், கடலூர் கிழக்கு, மேற்கு, விழுப்புரம் வடக்கு, தெற்கு, கிருஷ்ணகிரி, தருமபுரி என மாவட்ட வாரியாக ஆலோசனை நடைபெறும்.
8-ம் தேதி திருநெல்வேலி மாநகர், புறநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருப்பூர் மாநகர், புறநகர், கோவை மாநகர், புறநகர், நீலகிரி மாவட்டத்திற்கும், 9-ம் தேதி திருச்சி மாநகர், புறநகர், பெரம்பலூர், அரியலூர், கரூர், தஞ்சாவூர் வடக்கு, தெற்கு என மாவட்ட வாரியாக ஆலோசனை நடைபெறும்.
சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் அனைவரும் இந்த ஆலோசனைக் கூட்டங்களில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று சசிகலா தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்ற பிறகு சசிககா தலைமையில் நடைபெறும் முதல் நிர்வாகிகள் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications