மதுரையில் அதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை: பழிக்குப் பழியா?
மதுரை: மதுரையில் அதிமுக பிரமுகர் ஒருவர் 7 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை முனிச்சாலை பகுதியை சேர்ந்தவர் மயில்முருகன் (வயது40). அ.தி.மு.க. 72-வது வட்ட மேலமைப்பு பிரதிநிதியாகவும், ஜனதா கூட்டுறவு சங்க இயக்குனராகவும் இருந்து வந்தார். மயில்முருகன் இன்று காலை தனது வீட்டில் இருந்து முனிச்சாலையில் உள்ள தனது அலுவலகத்திற்கு நடந்து வந்தபோது ஒரு ஆட்டோவில் 7 பேர் கொண்ட கும்பல் விரைந்து வந்து அவரை சுற்றி வளைத்தனர்.
அப்போது மயில்முருகன் தப்ப முயன்றபோது அந்த கும்பல் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி விட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் மயில்முருகன் அதே இடத்தில் துடிதுடித்து செத்தார். அ.தி.மு.க. பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் முனிச்சாலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீஸ் துணை கமிஷனர் சமந்த் ரோகன் ராஜேந்திரா மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் சிறிது தூரம் ஓடிச்சென்று நின்று விட்டது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த கொலை சம்பவம் குறித்து தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட மயில்முருகனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. கொலையுண்ட மயில் முருகனுக்கு மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
பழிக்குப் பழி
மயில்முருகன் பழிக்குப் பழியாக கொலை செய்யப்பட்டு இருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
திங்களன்று மதுரை கீழமாரட் வீதி தி.மு.க. பிரமுகர் குருசாமியின் உறவினர் கஜேந்திரபாண்டி கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் திண்டுக்கல் கோர்ட்டில் 3 பேர் சரணடைந்தனர். இதில் கார்த்திக் என்பவர் கொலை செய்யப்பட்ட மயில்முருகனின் சகோதரி மகன் ஆவார்
தொடர் கொலைகள்
எனவே இந்த முன்விரோதத்தில் அந்த கும்பல் பழி வாங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது. ஆட்டோவில் தப்பி சென்ற கொலை கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் கொலையாளிகளை தேடி பல்வேறு பகுதிகளுக்கு விரைந்துள்ளனர்.
கடந்த 3 நாட்களில் நடந்த தொடர் கொலைகளால் முனிச்சாலை பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications