ஆகாயத்தில் பறக்கும் ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்ட நல்ல வாய்ப்பு... மு.க.ஸ்டாலின்
தூத்துக்குடி: ஆகாயத்தில் பறந்து வாக்காளர்களை சந்திக்க வரும் முதல்வர் ஜெயலலிதாவை லோக்சபா தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் என்.பி. ஜெகனை ஆதரித்து நேற்று இரவு தூத்துக்குடி செல்வநாயகபுரத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர் பெரியசாமி தலைமை வகித்தார். இதில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
முன்பு தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு செல்ல 16 மணி நேரமாகும். தற்போது கிழக்கு கடற்கரை சாலை வழியாக 8 மணி நேரத்தில் செல்ல முடிகிறது.

இதற்கு காரணம், மத்திய ஆட்சியில் திமுக அங்கம் வகித்ததுதான். தூத்துக்குடியில் ரூ.17 கோடியில் புதிய அரசு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. 4வது பைப் லைன் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
சுனாமியால் பாதிக்கப்பட்ட இடிந்தகரையில் ரூ.7.50 கோடியில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டது. தலா ரூ.1.50 லட்சம் மதிப்பில் 1196 சுனாமி குடியிருப்பு வீடுகள் ரூ.48 கோடியில் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2007ம் ஆண்டு தூத்துக்குடி முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டது. இங்கு நிவாரண பணியில் ஈடுபட என்னை கருணாநிதி அனுப்பி வைத்தார். நான் தூத்துக்குடிக்கு ஹெலிகாப்டரில் வரவில்லை. காரில்தான் வந்தேன். காரை ஊருக்கு வெளியே நிறுத்திவிட்டு, நடந்து சென்று பணிகளை பார்வையிட்டேன்.
நகரின் மையப்பகுதியில் வெள்ளம் வழிந்தோடுவதற்கு வசதியாக பக்கிள் ஓடையில் இருந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி, இருபுறமும் தார்சாலை அமைத்து வெள்ளம் வழிந்தோட வகை செய்யப்பட்டது. இதற்காக ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 12-8-2008ல் பணி துவங்கப்பட்டு 3 கட்டமாக பணிகளை நிறைவு செய்துள்ளோம்.
இந்த பணியை அதிமுக அரசு கிடப்பில் போட்டது. மக்கள் பணி செய்ய அவர்களுக்கு மனம் வரவில்லை. சேது சமுத்திர திட்டத்திற்கு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டவர் ஜெயலலிதா. அந்த திட்டத்திற்கு ராமர் சேது என பெயர் மாற்றம் செய்தாவது நிறைவேற்ற வலியுறுத்தியவர் திமுக தலைவர் கருணாநிதி.
தமிழகத்தில் இரண்டாவது தொழில் மையமாக தூத்துக்குடி விளங்குகிறது என்றும், சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் தூத்துக்குடி துறைமுகம் ஆசிய கண்டத்திலேயே 2வது பெரிய துறைமுகமாக உருவாகி இருக்கும் என்று விக்கி பீடியாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை முடக்கி தூத்துக்குடி வளர்ச்சியை கெடுத்தவர் ஜெயலலிதா.
மத்திய அரசில் திமுக அங்கம் வகித்ததால், தமிழகத்தில் ரூ.928 கோடியில் மீட்டர்கேஜ் ரயில் பாதைகள், அகல ரயில் பாதைகளாக மாற்றப்பட்டுள்ளது. ரூ.1828 கோடியில் 90 மேம்பாலங்கள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டது. சென்வாட் வரி முழுமையாக நீக்கம் செய்யப்பட்டது. 50 காசில் செல்போனில் நாடு முழுக்க பேசும் வசதி கொண்டு வரப்பட்டது. விவசாயிகளின் ரூ.72 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இப்படி பல நல்ல திட்டங்கள் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது இவ்வாறு மு.க.ஸ்டாலின் என்றார்.
இதேபோல காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து, திமுக பொருளாளார் மு.க.ஸ்டாலின் திருப்போரூரில் பேசிய போது, ஒரு சில தலைவர்கள் தேர்தல் நேரத்தில் மட்டுமே உங்களிடம் வருவார்கள். நாங்கள் எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்போம். ஜெயலலிதா ஆகாயத்தில் தனி விமானத்திலோ, ஹெலிகாப்டரிலோ வருவார். அவர் மேலே பறக்கும்போது, கீழே பூமியில் போலீசார் பாதுகாப்பு கொடுப்பார்கள்.
திமுக ஆட்சில் மத்திய கைலாஷ் முதல் மாமல்லபுரம் வரை தகவல் தொழில்நுட்ப நெடுஞ்சாலையாக ஆறு வழி சாலை அமைக்கப்பட்டது. ஸி1300 கோடி செலவில் சிறுசேரியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட்டு, 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், அந்த பூங்காவில் வேலை செய்த சாப்ட்வேர் ஊழியர் உமாமகேஸ்வரி, பலாத்காரம் செய்து, கொலை செய்யப்பட்டார். அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க இந்த ஆட்சியால் முடியவில்லை. இந்த ஆட்சி தேவையா. ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்ட ஒரு நல்ல வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது என்றார் மு.க.ஸ்டாலின்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications