'மோடி'யும் 'லேடி'யும் ஒன்றாகிட்டாங்களே..: புலம்பும் விஜயகாந்த்!
சென்னை: லோக்சபா துணை சபாநாயகராக அதிமுகவின் தம்பிதுரை தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாஜகவின் தமிழக கூட்டணிக் கட்சிகளான தேமுதிக, மதிமுக மற்றும் பாமக ஆகியவை குமுறிக் கொண்டிருக்கிப்பதாக கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலின் போது பெரும் பாடுபட்டு பாரதிய ஜனதா தலைமையில் தேமுதிக, மதிமுக, பாமக கட்சிகளை உள்ளடக்கிய ஒரு அணி உருவாக்கப்பட்டது. ஆனால் தருமபுரியில் பாமகவும் கன்னியாகுமரியில் பாஜகவும் மட்டுமே வெற்றி பெற்றது.

தேமுதிகவின் எதிர்பார்ப்பு
அதன் பின்னர் டெல்லியில் விஜயகாந்தை பிரதமர் மோடி பாராட்டியபோது அமைச்சரவையில் தேமுதிகவுக்கு இடம் கிடைக்கும்; ராஜ்யசபா சீட் கிடைக்கும் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது.

வைகோ- பாமகவின் எதிர்பார்ப்பு
இதேபோல் வைகோவும் ராஜ்யசபா எம்.பி.யாக வாய்ப்பிருக்கிறது; பாமகவுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதுவும் நடைபெறவில்லை.

அதிமுகவுக்கு துணை சபா
தமிழக பாரதிய ஜனதாவின் கூட்டணி கட்சிகள் கண்டுகொள்ளப்படவில்லை. இந்த நிலையில்தான் லோக்சபா துணை சபாநாயகர் பதவியை பாரதிய ஜனதா கட்சி அதிமுகவுக்கு விட்டுக் கொடுத்தது.

பாஜகவுடன் நெருக்கம் ஏன்?
இது குறித்து கருத்து தெரிவிக்கும் டெல்லி வட்டாரங்கள், பெங்களூர் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்வதற்காக பாஜகவுடன் நெருக்கம் பாராட்ட வேண்டிய நிலையில் இருக்கிறார் ஜெயலலிதா. இதனாலேயே பாரதிய ஜனதாவுடன் சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைக்கலாம் என்ற கருத்தை அதிமுக முன்வைத்து நெருக்கமாகிறது என்று கூறப்படுகிறது.

மோடி தரப்பு விளக்கம்
ஆனால் நரேந்திர மோடி தரப்போ, ராஜ்யசபாவில் சுமூகமாக மசோதாக்களை நிறைவேற்றும் நோக்கத்துடனேயே அதிமுகவுக்கு துணை சபாநாயகர் பதவி விட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் பற்றியெல்லாம் அவர் யோசிக்கவே இல்லை என்று கூறுகிறது.

அதிமுக-பாஜக நெருக்கம்
இப்படி பாஜகவுடன் ஏதோ ஒரு புள்ளியில் நெருக்கம் பாராட்ட அதிமுக மும்முரம் காட்டுவது குறித்து தமது நட்பு வட்டத்தில் புலம்பிய விஜயகாந்த், 'அட மோடியும் லேடியும் ஒன்னாகிட்டாங்களே' என்று கூறியிருக்கிறார்.

என்ன செய்யலாம்?
இதே போல்தான் பாமக மற்றும் மதிமுகவும் இப்படியெல்லாம் அதிமுகவுடன் பாஜக நெருக்கமாகப் போகும் என்று ஏற்கெனவே எதிர்பார்த்ததுதான்.. வேற எதாவது முடிவு எடுத்தாக வேண்டும் என்று தீவிர ஆலோசனையில் இருக்கிறார்களாம்.
தமிழக அரசியல் களம் மாற்றத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது?
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications