அவதூறு பேச்சு: இளங்கோவன், ஜெ. உருவ பொம்மைகளை மாறி, மாறி எரித்த அதிமுக, காங். தொண்டர்கள்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: திருவாரூர் பொதுக் கூட்டத்தில் கருணாநிதியுடன் பங்கேற்ற தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாகக் கூறி இளங்கோவனின் உருவ பொம்மையை எரித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூரில் நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதியுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உரையாற்றினார்.

இளங்கோவன் பேசும்போது, முதலமைச்சர் ஜெயலலிதா மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். ஆனால், இதை தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா குறித்து இளங்கோவன் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அதிமுகவினரிடையே கோபத்தை உருவாக்கியது.

எனவே நள்ளிரவில் திருவாரூர் பேருந்து நிலையம் முன்பாக திரண்ட அதிமுகவினர் இளங்கோவன் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து அவரது உருவ பொம்மை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் அதிமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதிமுகவினர் இளங்கோவன் உருவபொம்மையை எரிப்பதை அறிந்த காங்கிரஸ் கட்சியினர் திருவாரூர் பேருந்து நிலையத்தில் திரண்டு முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவபொம்மையை எரிக்க முயன்றனர். அதிமுகவினர் மற்றும் காங்கிரசாரின் போட்டி போராட்டங்களால் திருவாரூர் பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

ஜெயலலிதா, மோடி குறித்து இளங்கோவன் தரக்குறைவாக பேசி பலரது கண்டனத்திற்கும் ஆளானவர் என்பது நினைவிருக்கலாம்.

மன்னார்குடியில் இளங்கோவன் உருவபொம்மை எரிப்பு

பொதுகூட்டத்தில் ஜெயலலிதா குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் பேசிய பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதுறாக பேசியதற்க்கு கண்டணம் தெரிவித்து மன்னார்குடி பெரியார் சிலை, கீழப்பாலம் ஆகிய இடங்களில் அதிமுக வினர் இ.வி.கே.எஸ். இளங்கோவன் உருவ பொம்மை எரித்து 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

காஞ்சிபுரத்தில் ஈ.வி.கே.எஸ். உருவபொம்மை எரிப்பு

திருவாரூர் பொதுகூட்டத்தில் ஜெயலலிதா குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் பேசிய பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதுறாக பேசியதற்க்கு கண்டணம் தெரிவித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உருவ பொம்மை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காஞ்சிபுரத்தில் 200க்கும் மேற்பட்டோர் இளங்கோவன் உருவபொம்மையை எரித்து கண்டன கோஷம் எழுப்பினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+