ஆட்சி எங்களால் கலையாது... நாளைக்கு நல்ல செய்தி வரும் - ஓபிஎஸ்
நாளை அல்லது நாளை மறுநாள் நீங்கள் எதிர்பார்க்கும் நல்ல செய்தி வரும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சென்னை: அணிகளை இணைக்க எந்த நிபந்தனையும் நாங்கள் வைக்கவில்லை என்றும் நீங்கள் எதிர்பார்க்கும் நல்ல செய்தி இரு தினங்களில் வரும் என்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
பிளவுபட்டுள்ள அதிமுக அணிகளை இணைக்க இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இணைப்பு பற்றி நேற்றே அறிவிப்பு வெளியாகும் என்று தொண்டர்கள் காத்திருந்தனர். ஆனால் இழுபறியால் இணைப்பு தள்ளிப்போனது.

இந்த சூழ்நிலையில் இன்றும் ஓ.பன்னீர் செல்வம் தனது அணியினருடன் ஆலோசனை நடத்தினார். காலையில் தனது வீட்டில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், அதிமுக இரு அணிகள் இணைப்பு குறித்து ஓரிரு தினங்களில் நல்ல முடிவு அறிவிக்கப்படும். அதிமுக இணைப்பு பற்றிய பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்துகொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
மாலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், நாளை அல்லது நாளை மறுநாள் நீங்கள் எதிர்பார்க்கும் நல்ல செய்தி வரும் என்றார்.
எங்கள் பேச்சுவார்த்தையில் எந்த நிபந்தனையும் இல்லை. பேச்சுவார்த்தை முடிந்த பிறகு நாங்கள் தரும் அறிக்கையில் எல்லா விவரமும் தருவோம் என்றார்.
ஆட்சி எங்களால் கலையாது என்று கூறிய ஓ.பன்னீர் செல்வம், பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறுவதாக தெரிவித்தார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications