ஜல்லிக்கட்டு நாயகன்.. பன்னீர்செல்வத்திற்கு சட்டசபையில் புகழாரம்
நேற்றைய கேள்வி நேரத்தின் போது, அதிமுக எம்.எல்.ஏ தென்னரசு, ஜல்லிக்கட்டு நாயகன் என்ற ஒரு புகழ்ச்சியை பன்னீர்செல்வத்திற்கு சூட்டினார்.
சென்னை: முதல்வர் பன்னீர்செல்வத்தை, ஜல்லிக்கட்டு நாயகன் என்று அதிமுக எம்.எல்.ஏ தென்னரசு புகழ்ந்துள்ளார்.
அதிமுகவின் அதிகார தலைமையாக இருப்பது சசிகலா. எனவே, சட்டசபையில் பல அதிமுக எம்.எல்.ஏக்கள் சசிகலாவை புகழ்வது வாடிக்கை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும் அதன் பிறகு, சசிகலாவையும் அதிமுக எம்.எல்.ஏக்கள் புகழ்வது வாடிக்கையாகியுள்ளது.

இதனால்தான், சட்டசபையிலும், சின்னம்மா, குட்டியம்மா என்று சசிகலாவை புகழ்வதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார். ஆனால் சிலர் மட்டுமே முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை பாராட்டி பேசுவது உண்டு.
நேற்றைய கேள்வி நேரத்தின் போது, அதிமுக எம்.எல்.ஏ தென்னரசு இப்படி ஒரு புகழ்ச்சியை பன்னீர்செல்வத்திற்கு சூட்டினார். ஜெயலலிதா, சசிகலா ஆகியோரைதான் இவரும் முதலில் புகழ்ந்தார். இதன்பிறகு, "ஜல்லிக்கட்டு நாயகன் முதல்வரை வணங்கி, பேச்சை துவக்குகிறேன்" என்று தெரிவித்தார். இதைக் கேட்ட பன்னீர்செல்வம், தென்னரசுவை சிரித்தபடி அவரை திரும்பி பார்த்தார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சி செய்து சட்டம் இயற்றினார். டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்து அவசர சட்டத்திற்கு தேவையான ஏற்பாடுகளை செய்தார். இதையடுத்துதான், பன்னீர்செல்வத்தை ஜல்லிக்கட்டு நாயகன் என புகழ்ந்துள்ளார் தென்னரசு.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications