வெள்ள நிவாரண நிதிக்காக அதிமுக எம்.பி., எம்.எல்.ஏக்கள் ஒரு மாத சம்பளம் அளிப்பார்கள்: ஜெ. அறிவிப்பு
சென்னை: அதிமுக எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை, வெள்ள நிவாரண நிதிக்கு அளிப்பார்கள் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வெள்ள சேதத்தில் இருந்து மக்களை மீட்டெடுக்க, அனைத்து தரப்பினரும் தங்களால் முடிந்த உடலுழைப்பு, நிதி உதவி செய்துள்ளனர்.
கழகத்தினர் இயன்ற அளவுக்கு துயர் துடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நிவாரண பணிகளில் தன்னலமின்றி ஈடுபட்டுள்ள அனைவருக்கும் நன்றியும், பாராட்டுகளும்.

மழை, வெள்ள சேதத்தில் இருந்து தமிழக மக்களை மீட்டெடுக்க முழு வீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முழு மூச்சாக உதவிப்பணியில் ஈடுபட்டுள்ளோம். தமிழகத்தில், மழை ஏற்படுத்தியுள்ள இழப்புகள் ஏராளம்.
எந்த நேரத்திலும் நான் உங்களுடனே இருப்பேன், கலங்காதீர்கள். என் எண்ணம் எப்போதும் உங்களை பற்றியே இருக்கும். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications