அதிமுகவில் அடுத்த அதிரடி.. செப். 12ம் தேதி பொதுக்குழு, செயற்குழு கூடுகிறது!
சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் செப்டம்பர் 12ஆம் தேதி கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் அதிமுக பொதுக்குழு செப்டம்பர் 12ல் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெறும் தேதி முடிவு செய்யப்பட்டது.

செப்டம்பர் 12ஆம் தேதி காலை 10.35 மணிக்கு வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெறுகிறது. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது.
தற்போது, அதிமுக பொதுக்குழுவில் 3 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். மொத்த பொதுக்குழு உறுப்பினர்களில் 5ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அதிமுக கட்சியின் தற்போதைய தலைமைக்கு கடிதம் எழுதினால் பொதுக்குழுவை கூட்டலாம் என்ற சட்டவிதி உள்ளது.
பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சசிகலாவை நீக்குவதற்கான தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுச்செயலாளர் சசிகலாவை நீக்குவதாக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி, அதை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்தாலே கட்சி மற்றும் இரட்டை இலையை முதல்வர் எடப்பாடி அணியினர் எளிதில் கைப்பற்றி விடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்?












Click it and Unblock the Notifications