டிடிவி தினகரனுக்கு எதிராக பகிரங்கமாக முஷ்டி முறுக்கிய எடப்பாடி அணி! அதிமுகவில் இப்போ 3 அணி!!
சென்னை: டிடிவி தினகரனுக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணி முஷ்டி முறுக்கியுள்ளது.
சசிகலா குடும்பத்தை கட்சியை விட்டே நீக்க வேண்டும், ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற இரு கோரிக்கைகளை முன் வைத்து பன்னீர்செல்வம் அணி முஷ்டியை தூக்கியபடி அலைகிறது.
மற்றொரு பக்கம், நாம் உண்டு நமது வேலை உண்டு, யார் வம்புக்கும் போறதில்லை என்பதை போல முகத்தை வைத்துக்கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட அவரது அணியினர் உள்ளனர்.

ஜாமீன்
இவ்விரு கோஷ்டிகளுமே, தாராளமாக தங்கள் பணிகளை பார்த்தபடிதான் உள்ளனர். ஆனால் இதெல்லாம் டிடிவி தினகரன் ஜாமீனில் வெளியே வரும்வரை இருந்த நிலைதான். அவர் ஜாமீனில் வெளியே வந்ததும், இரு அணிகளுக்குமே கிலி பிடித்துள்ளது.

கட்சிப் பணி
தினகரனும், வெளியே வந்ததும் முதல் வேளையாக நான் கட்சிப் பணியாற்றப்போகிறேன். இதுவரை இரு அணிகளும் இணையாத நிலையில் நான் கட்சியை விட்டு விகியிருப்பது வீண் என கூறி, திகில் கிளப்பிவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த, அமைச்சர் செங்கோட்டையன், தினகரன் கட்சியில் இருக்க வேண்டுமா என்பதையே எடப்பாடிதான் சொல்ல வேண்டும் என கூறினார்.

அவசர ஆலோசனை
இந்த நிலையில், தினகரன் இன்று பெங்களூருக்கு சசிகலாவை சிறையில் சென்று சந்திக்க சென்ற நிலையில், அவசரமாக அமைச்சர் ஜெயக்குமார் அறையில் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். பிறகு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடமும் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.

மூன்று அணி
இதன்பிறகு நிருபர்களுக்கு அமைச்சர்கள் கூட்டாக காட்சியளித்தனர். அவர்கள் சார்பில் ஜெயக்குமார் பேட்டியளித்தார். டிடிவி தினகரன், கட்சியை விட்டே விலகி இருக்க வேண்டும் என்று, ஜெயக்குமார் அறிவித்தார். இதன்மூலம், டிடிவி தினகரன் vs பன்னீர் என்ற நிலை மாறி டிடிவி தினகரன் vs எடப்பாடி என மாறியுள்ளது.
இதில் ஜெயக்குமார் முக்கிய பங்காற்றியுள்ளார். இதனால் அதிமுக அதிகாரப்பூர்வமாகவே 3 அணிகளாக பிரிந்துள்ளது.
-
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications