இட்லிபானை... கிரைண்டர்... இது சசி அணியின் மகளிர்தின கொண்டாட்டம்

சசிகலா சிறையில் இருக்கும் சோகமான நிலையிலும் அதிமுக தலைமை அலுவலகத்தில் வழக்கத்தை விட உற்சாகம் குறைவாகவே மகளிர்தினம் கொண்டாடப்பட்டது. இட்லிபானை, கிரைண்டர்கள் தொண்டர்களுக்கு கொடுக்கப்பட்டன.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்வதேச மகளிர்தினம் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. ஜெயலலிதா மரணமடைந்து 90 நாட்களை கடந்துள்ளது. சசிகலாவும் சிறையில் உள்ள நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு பா.வளர்மதி, கோகுல இந்திரா, சி.ஆர். சரஸ்வதி ஆகியோர் இட்லிபானை, கிரைண்டர், லேப்டாப், தையல்மிஷின் ஆகியவற்றை தொண்டர்களுக்கு கொடுத்து கொண்டாடினர்

கடந்த ஆண்டைப் போல பிரம்மாண்ட அம்மா கேக் வெட்டவில்லை, ஆடல் பாடல் இல்லை ஆனாலும் ஜெயலலிதா மரணத்திற்கு நீதி கேட்டு ஓபிஎஸ் உண்ணாவிரதம் இருக்கும் நிலையில் மகளிர் அணியைச் சேர்ந்தவர்கள் அங்கே செல்வதை தடுக்க அதிரடியாக யோசித்தே நலத்திட்ட உதவிகளை வழங்கி மகளிர்தினத்தை கொண்டாடியுள்ளனர்.

ரோஸ் கொடுத்து வரவேற்பு

ரோஸ் கொடுத்து வரவேற்பு

இன்று காலையிலேயே ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் களை கட்டியது. விழாவிற்கு வந்த அனைவருக்கும் ரோஸ் கொடுத்து வரவேற்றார் பா. வளர்மதி. ஒருவருக்கொருவர் மகளிர் தின வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

நலத்திட்ட உதவிகள்

நலத்திட்ட உதவிகள்

கம்ப்யூட்டர், லேப்டாப், தையல் மெஷின், இட்லி பானை, அயர்ன் பாக்ஸ் மற்றும் புடவை உள்ளிட்ட நலத்திட்ட பொருட்களை வந்திருந்த அனைவருக்கும் வழங்கினார்கள். கூடவே சுடச்சுட பிரியாணி வழங்கி மகளிர் தினத்தை சிறப்பித்தனர். இதற்கான ஏற்பாடுகள் எல்லமே கோகுல இந்திரா, ப.வளர்மதி, சி.ஆர். சரஸ்வதிதானாம்.

கேக் மிஸ்சிங்

கேக் மிஸ்சிங்

கடந்த ஆண்டு அதிமுக தலைமை அலுவலகத்தில் மகளிர்தினம் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. பிரம்மாண்ட கேட்க வெட்டி அமர்களமாக கொண்டாடினர். ஆட்டம் பாட்டம் என அமர்களப்பட்டது.

வளர்மதி - கோகுல இந்திரா

வளர்மதி - கோகுல இந்திரா

கேக் வெட்டிய கோகுல இந்திராவும், பா. வளர்மதியும் மாறி மாறி உற்சாகமாக கேக் ஊட்டிக்கொண்டனர். கடந்த ஆண்டு இருவருமே அமைச்சர்களாக இருந்தனர். இந்த ஆண்டு ஜெயலலிதா மரணம், சசிகலாவுக்கு சிறை என சோக நிகழ்வுகள் அடுத்தடுத்து நடைபெற்றுள்ளதால் கேக் வெட்டவில்லை.

பிரிந்த அதிமுக

பிரிந்த அதிமுக

அதிமுகவும் இரண்டாக பிளவு பட்டுள்ளது. மகளிர் அணியில் இருந்த பெரும்பாலோனோர் ஓபிஎஸ் உண்ணாவிரதத்திற்கு சென்று விட்டனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு கூட்டம் குறைவாகவே இருந்தது. அதோடு மகளிர் தின உற்சாகமும் குறைவாகவே இருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+