அப்படியே அம்மா வாய்ஸ் மாதிரி இருக்குல்ல.. தீபா பேச்சை கேட்டு உருகிய அதிமுக பெண்கள்
தீபாவின் உருவமும், குரலும் ஜெயலலிதாவை போன்றே இருப்பது அதிமுகவின் வாக்கு வங்கியான அடிமட்ட பெண்களிடம் பெரும் ஈர்ப்பை உருவாக்கி வருகிறது
சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பதவியேற்றுள்ளார். ஆனால், சசிகலா தலைமையை அதிமுகவின் பல லட்சம் தொண்டர்கள் ஏற்கவில்லை என தெரிகிறது. ஆங்காங்கு சசிகலா பேனர்கள் கிழித்து எறிகிறார்கள்.
இந்த நிலையில், சசிகலாவுக்கு மாற்றாக தொண்டர்கள் ஜெயலலிதா அண்ணன் ஜெயக்குமாரின் மகள் தீபாவை கட்சியின் தலைமை பதவி வகிக்க அழைக்கிறார்கள்.

சென்னை தி.நகரில் உள்ள சிவஞானம் சாலையிலுள்ள தீபா வீட்டுக்கு தினமும் அதிமுக தொண்டர்கள் வந்து தீபாவை அரசியலுக்கு அழைக்கிறார்கள். இன்று தீபா வீட்டு முன்பு அதிமுக தொண்டர்கள் பெருமளவுக்கு குவிந்தனர். அதிலும் பெண் தொண்டர்கள் உணர்ச்சி மிகுதியில் இருந்தனர்.
அவர்களின் தொடர் கோஷங்களால் வீட்டை விட்டு வெளியே வந்தார் தீபா. பால்கனியில் அவரை பார்த்ததும், ஆண், பெண் தொண்டர்கள் ஆரவார கோஷம் எழுப்பினர்.
அவர்கள் மத்தியில் மைக் பிடித்து பேசிய தீபா, அம்மாவின் (ஜெயலலிதா) தியாகங்களையும், புகழையும் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு உண்டு. உங்களுக்காக நான் பணியாற்ற காத்திருக்கிறேன் என்று தெரிவித்தார்.
அவர் இரட்டை விரலை அசைத்து காண்பித்த போது "அப்படியே அம்மா மாதிரி இருக்காங்கல்ல.." என்று பெண் தொண்டர்கள் பேசிக்கொண்டதை கேட்க முடிந்தது. அதேபோல ஜெயா பேசும்போது, "அப்படியே அம்மா வாய்ஸ் மாதிரி இருக்குல்ல.. " என பெண் தொண்டர்கள் உருக்கமாகவும், வியப்பாகவும் ஒருவருக்கொருவர் பேசியதை கேட்க முடிந்தது.
தீபாவின் உருவமும், குரலும் ஜெயலலிதாவை போன்றே இருப்பது அதிமுகவின் வாக்கு வங்கியான அடிமட்ட பெண்களிடம் பெரும் ஈர்ப்பை உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications