அதிமுக கூட்டணி அமைத்தால்.. யார் சேர வருவார்கள்?
சென்னை: சட்டசபை தேர்தலில் அதிமுக எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கப்போகிறது என்பது மில்லியன் டாலர் கேள்வியாக தொக்கி நிற்கிறது.
கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பிராதன கட்சியாக தேமுதிக இருந்தது. ஆனால், நாடாளுமன்ற தேர்தலின்போது, தனித்தே தேர்தலை சந்திப்பதாக அறிவித்த ஜெயலலிதா அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தினார்.
ஜெயலலிதா கணக்குப்படியே, தமிழகம், புதுச்சேரி மாநிலங்களிலுள்ள 40 மக்களவை தொகுதிகளில் 38 தொகுதிகளை வென்று அசத்தியது அதிமுக.
இந்நிலையில், சட்டசபை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், முதல்முறையாக, கூட்டணி பற்றி, ஜெயலலிதாவை குழப்பம் எட்டிப்பார்த்துள்ளது.

எதிரிகள்
சட்டசபை தேர்தலில் வெற்றி பெற கூட்டணி அவசியம் என்று உணர்ந்ததால்தான், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளையே காணோம் என்று கூறிவந்த ஜெயலலிதா, தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து பரிசீலிக்கப்படும் என்று, சமீபத்தில் நடந்த கட்சி கூட்டத்தில் அறிவித்தார்.

அதிமுகவுக்கு சிக்கல்
இந்நிலையில்தான், ஒரு சிக்கல் அதிமுகவுக்கு எழுந்துள்ளது. அதிமுக கூட்டணி கதவுகளை திறக்காது என்று நினைத்த சில கட்சிகள், மக்கள் நல கூட்டணியில் இணைந்துள்ளன. போதிய சீட் தரமாட்டார் என்று நினைக்கும் கட்சிகள் எங்கும் போகாமல் இருக்கின்றன.

திமுகவோடு செல்ல தயக்கம்
அதேநேரம், கடந்த ஓராண்டாகவே, எந்த கட்சியுடனும் கூட்டணி என்ற அழைப்பை திமுகவிடுத்துவிட்டது. இருப்பினும் திமுகவுடன் சேர பல கட்சிகள் தயக்கம் தெரிவிக்கின்றன. காங்கிரசும், இந்திய முஸ்லிம் லீக் கட்சியும் அதிகாரப்பூர்மாக கூட்டணியில் சேர்ந்துள்ளன.

யார் செல்வார்கள்
தேமுதிக, ஜெயலலிதா பக்கம் வராது, இவர்களும் அழைக்கப்போவதில்லை. முதல்வர் வேட்பாளரை அறிவித்துவிட்ட பாமகவாலும் ஜெயலலிதா பக்கம் போக முடியாது. இதை தவிர்த்து பெரிய கட்சிகள் என்றால், பாஜக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள்தான்.

தனித்து உள்ளன
பாஜக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளையும், தமிழ் மாநில காங்கிரஸ், தமிழர் வாழ்வுரிமை கட்சி, குடியரசு கட்சி ஆகியவை சேர முடியும். இருப்பினும் பாஜக தனித்து செயல்படும் நிலையில், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக ஆகியவை மக்கள் நல கூட்டணியில் உள்ளன.

டிமாண்ட் போச்சா
இந்நிலையில், அதிமுகவால் யாருடன் கூட்டணி அமைப்பது என்ற விவகாரத்தில் இன்னமும் ஒரு முடிவை எட்ட முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் அக்கட்சி இன்னும் முழு வீச்சில் தேர்தல் நடவடிக்கையில் இறங்க முடியாமல் உள்ளது. வழக்கமாக, திமுக, அதிமுகவுக்கு தேர்தல் கூட்டணியில் பெரும் டிமாண்ட் இருக்கும். முதல்முறையாக இத்தேர்தலில் இரு கட்சிகளைவிட்டும் பல கட்சிகள் விலகி நிற்கின்றன.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications