இன்று 'ஸ்டிரைக்'.. இரண்டு நாள் 'லீவு'- 3 நாட்களுக்கு வங்கிப் பக்கம் யாரும் போய்ராதீங்க!
சென்னை: ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் உள்பட நாடு முழுவதும் 3.5 லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக ஜனவரி 8, ஜனவரி 9 (இரண்டாவது சனிக்கிழமை), ஜனவரி 10 (ஞாயிறு) ஆகிய மூன்று நாள்கள் தொடர்ந்து வங்கிகள் செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது.

வங்கி ஊழியர்களின் புதிய ஊதிய உயர்வு, பணிச் சலுகை ஆகியவை தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கியின் 5 துணை வங்கிகளின் சட்டத்துக்கு முரணான நடவடிக்கைகளை கைவிடக் கோரி நாடு முழுவதும் இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது என்று அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் சி.ஹெச்.வெங்கடாசலம் தெரிவித்தார்.
பாரத ஸ்டேட் வங்கியின் துணை வங்கிகளான, "ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர்', "ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத்', "ஸ்டேட் பாங்க் ஆப் பிகானிர்', "ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர்', "ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா' ஆகிய 5 வங்கிகளின் நிர்வாகங்கள் புதிய பணி முறைகளை வாபஸ் பெறக் கோரி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது என்று வெங்கடாசலம் தெரிவித்தார்.
நாடு முழுவதும் சுமார் 3.5 லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுப டவுள்ளனர். ஸ்டேட் வங்கியின் துணை வங்கிகள் சட்டத்திற்கு முரணாக நடவடிக்கை எடுத்துள்ளதாகப் புகார் கூறப்பட்டு இந்த போராட்டம் நடைபெறுகிறது. வேலை நிறுத்தத்தை தொடர்ந்து சனிக்கிழமை விடுமுறை என்பதால் 3 நாட்கள் வங்கிகள் செயல்படாது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications