ஏற்காடு இடைத் தேர்தல் - அதிமுகவை ஆதரிப்பதாக டாக்டர் சேதுராமன் அறிவிப்பு
மதுரை: ஏற்காடு இடைத் தேர்தலில் அதிமுகவை ஆதரிப்பதாக டாக்டர் சேதுராமன் தலைமையிலான அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் தெரிவித்துள்ளது.
அதிமுக கூட்டணியில்தான் இந்தக் கட்சி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே திமுக தனது வேட்பாளரை அறிவித்து பிற கட்சிகளிடம் ஆதரவும் கோர ஆரம்பித்து விட்டது. ஆனால் அதிமுக வேட்பாளர் பெயர் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் தலைவர் டாக்டர் சேதுராமன், தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில், தாங்கள் தமிழக முதல்வராக பொறுப்பேற்று தொடர்ந்து வரலாற்று சாதனைகளை நிகழ்த்தி வருகின்றீர்கள். உங்களுக்கு எங்களது அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் சார்பாக பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
டிசம்பர் 4 அன்று தமிழகத்தில் நடைபெற உள்ள ஏற்காடு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் அதிமுகவிற்கு முழு ஆதரவு அளிக்கிறது.
அதிமுக வேட்பாளர் வெற்றிபெறுவதற்கு எங்களது அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் பாடுபடும் என்று தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications