உயரதிகாரிகள் டார்ச்சர்... சென்னையில் ஏர் இந்தியா விமான பணிப்பெண் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏர் இந்தியா விமானத்தின் பணிப்பெண் ஒருவர் அவரது வீட்டு மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னை மீனம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயரதிகாரிகள் டார்ச்சர் செய்வதாக அவர் மரணத்திற்கு முன்பாக கடிதம் எழுதி வைத்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் பெயர் தன்பிரீத் சிங்பால், வயது 32 என்பதாகும். இவர் மீனம்பாக்கத்தில் உள்ள ஏர் இந்தியா காலனி குடியிருப்பில் தனது கணவர் அணுப் நாயருடன் வசித்து வந்தார். காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.

Air hostess commits suicide Chennai Meenampakkam

அனுக் நாயர் கொடுத்த தகவலின் பேரில் மீனம்பாக்கம் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கடிதத்தையும் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் பணிச்சுமையாலும், உயரதிகாரிகள் டார்ச்ர் காரணமாகவும் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக எழுதப்பட்டிருந்தது. தன்பிரீத் தற்கொலை தொடர்பாப அனுக் நாயரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இருவருக்கும் திருமணம் ஆகி 3 ஆண்டுகள் மட்டுமே ஆகிறது என்பதால் இந்த வழக்கை ஆர்.டி.ஓ. விசாரிக்க போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+