ஏர்செல் நிறுவனம் மூடப்படவில்லை.. வதந்திகளை நம்ப வேண்டாம்.. அதிகாரிகள் விளக்கம்!
ஏர்செல் நிறுவனம் மூடப்படவில்லை என்று அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் விளக்கம் அளித்து இருக்கிறார்கள்.
சென்னை: ஏர்செல் நிறுவனம் மூடப்படவில்லை என்று அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் விளக்கம் அளித்து இருக்கிறார்கள். மேலும் யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கோரிக்கை வைத்து இருக்கிறார்கள்.
இதுவரை அந்த நிறுவனத்தைவிட்டு வெளியேற 15 லட்சம் பேர் கோரிக்கை வைத்து இருக்கிறார்கள். ஆனால் இதில் 90 சதவீத மக்களின் கோரிக்கையை அந்நிறுவனம் இன்னும் ஏற்கவில்லை.
தற்போது இந்த நிறுவனம் மூடப்படப்போகிறது என்று கூறப்பட்டு உள்ளது. ஆனால் இதில் உண்மையான நிலவரம் என்ன என்று தற்போதுதான் தகவல் கிடைத்துள்ளது.

எப்படி வழங்கியது
கடந்த டிசம்பர் மாதமே இந்த பிரச்சனை தொடங்கி இருக்கிறது. ஏர்செல் நிறுவனத்திற்கும் மூன்று டவர் கம்பெனிகளுக்கும் இடையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதை வைத்துதான் இவ்வளவு வருடம் இந்தியா முழுக்க ஏர்செல், சிக்னல் வழங்கிக் கொண்டு இருந்தது.

காரணம் என்ன
இந்த நிலையில் அதில் ஒரு நிறுவனத்துடன் தற்போது ஏர்செல்லுக்கு பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. என்ன மாதிரியான பிரச்சனை என்று தெரியவில்லை. அந்த நிறுவனம்தான் இந்தியாவில் நிறைய இடங்களில் ஏர்டெல்லுக்கு சிக்னல் வழங்கி வருகிறது. இதனால்தான் தற்போது சிக்னல் எடுப்பதில்லை.

சீக்கிரம் வந்துவிடும்
இதுகுறித்து இப்போதுதான் பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறது. விரைவில் இந்த பிரச்சனை தீர்க்கப்படும். இதனால் கம்பெனி மூடப்பட போவதில்லை என்று அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. மீண்டும் சேவை ஆரம்பிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

இல்லை
அதேபோல் நிறுவன ஊழியர்களுக்கும் கம்பெனி மூடுதல் குறித்த தகவல் செல்லவில்லை. இந்தியா முழுக்க ஏர்செல்லில் 7000 பேர் வரை வேலை செய்கிறார்கள். இவர்களில் யாருக்கும் இதுகுறித்து தகவல் செல்லவில்லை. எனவே நிறுவனம் மூடப்படுவது பொய் என்பது உறுதியாகி உள்ளது.

போட்டி
இது முழுக்க முழுக்க புரளி என்று கூறப்பட்டு உள்ளது. இதை பின்பிருந்து போட்டியாளர்கள் இயக்குவதாக கூறப்பட்டுள்ளது. மொத்தமாக நிறுவனத்தை காலி செய்ய போட்டியாளர்கள் இப்படி செய்கிறார்கள் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications