ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட சென்னைப் பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை.. தாயும், சேய்களும் நலம்.. !
சென்னை: சென்னையில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் சிக்கி வீட்டில் தவித்த கர்ப்பிணிப் பெண் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டார். தற்போது அவருக்கு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது. இரண்டு அழகான தேவதைகளை அப்பெண் பெற்றுள்ளார். தாயும்,சேய்களும் நலம் என அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
நிறை மாத கர்ப்பிணியாக இருந்தவர் தீப்தி வேலுச்சாமி. 28 வயதான அவர் ராமாவரம் பகுதியில் வசித்து வருகிறார். இவரது கணவர் கார்த்திக் வேலுச்சாமி பெங்களூரில் பணியாற்றி வருகிறார்.

டிசம்பர் 2ம் தேதி அவருக்கு பிரசவ வலி எடுத்தது. இதையடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் குடும்பத்தினர் தவித்தனர். அப்போது பார்த்து வேலுச்சாமி பெங்களூரில் இருந்தார். இந்த நிலையில்தான் விமானப்படை ஹெலிகாப்டரின் உதவி கோரப்பட்டது. இதையடுத்து தாம்பரம் விமான தளத்திலிருந்து விரைந்து வந்த ஹெலிகாப்டர் மூலம் தீப்தி மீட்கப்பட்டார்.
உடனடியாக தாம்பரம் விமானதளத்திற்கு தீப்தி கொண்டு வரப்பட்டார். அங்கிருந்து அவரை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்று சேர்த்தனர். அங்கு தீப்திக்கு இரட்டைப் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் தீப்தி குடும்பத்தினரும், அவரது கணவரும் பெரும் நிம்மதியடைந்துள்ளனர். தாயும், சேய்களும் நலம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கார்த்திக் வேலுச்சாமி கூறுகையில், டிசம்பர் 9ம் தேதி தீப்தியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். எனக்கு இந்தத் தகவல் வந்தபோது நான் அடுத்த நாள் தான் கிளம்பி வர முடிந்தது. தாம்பரம் போய்ச் சேர்ந்தேன். 4ம் தேதி எனது மனைவி பிரசவித்தார் என்றார்.
பெரும் சிரமத்திற்கு மத்தியில் எனது மனைவிக்குப் பிரசவம் நடந்தது. ஆனால் இத்தனை சிரமத்தையும் எனது இரு மகள்களும் போக்க விட்டனர். அவர்களின் முகத்தைப் பார்த்ததும் பட்ட கஷ்டமெல்லாம் போய் விட்டது என்றார் கார்த்தி.
தீப்தி மட்டுமல்லாமல் மேலும் 4 கர்ப்பிணிகளை இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் சென்னை வெள்ளத்திலிருந்து காத்து பத்திரமாக சேர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Kudos to airforce ... Evacuated one pregnant at Jains avantika lady and a child
Posted by Madhu Khurana Gambhir on Thursday, December 3, 2015
29 வயது கர்ப்பிணி சுகன்யா (7 மாத கர்ப்பிணி) டிசம்பர் 3ம் தேதி கிண்டி அருகே அவரது வீட்டிலிருந்து அவரது 3 வயது முதல் குழந்தையுடன் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டார். தாம்பரம் விமான தளத்திற்குக் கொண்டு வரப்பட்ட அவர் அஙகிருந்து மருத்துவமனைக்கு அனுப்பப்பபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications